பக்கம்:வெறுந்தாள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 வெறுந்தாள் இது முக்கியமாகத் தொழிலாளியைப் பாதிக்கும் பிரச்சனை. குடித்துப் பழகிவிட்ட அவனைத் தடுக்க முடியாது. அது அவன் பழக்கம். அதற்காகத் தண்டிப்பது நியாயமாகப் படவில்லை. குடி' தடுக்கப்படலாம், ஆனால் தனி மனிதன் பழகிவிட்ட காரணத்தால் குடிக்க வேண்டும் என்றால். அவர்களைத் திருத்த முடியாது. திருத்த முடியாது என்பதற்காக அவர்களைத் தண்டிப்பது தவறு. கள்ளச்சாராயம் ஒரு குடிசைத் தொழிலாகப் பெருகி விட்டது. இதைத் தடுக்க அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கிறது. ஊழல் பெருகுவதற்கு இது வழி செய்கிறது என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. இதையே தொழிலாகப் பலர் நடத்துகிறார்கள். அவர்கள் அரசாங்கத்துக்கு எந்த வரியும் செலுத்துவதில்லை. தனிமனிதர் ஒழுக்கப் பிரச் சனையில் அரசாங்கம் தலையிடுவதால் நாட்டில் சமுதாய ஒழுங்கு கெட்டுவிடுகிறது. 'மதுவிலக்கு கொண்டு வரலாம் என்றாலும் தனிவிலக்குகளும் அளிக்கப்பட வேண்டும். சிகரெட்டுக் குடிப்பது பொது இடங்களில் தவிர்க்கப் படுகிறது. அதே போலப் பொது இடங்களில் குடிப்பதைத் தவிர்க்கலாம். அவர்கள் இல்லங்களில் கொண்டு சென்று குடிக்கலாம் என்ற நிலைமை உருவானால் அவன் யோக் கியமாக மாறுவான். மனைவி அவனைத் திருத்த முடியும். குடும்பம் அவனைத் திருத்தும். அவன் கண்ணுக்குத் தெரியாமல் மறைத்துக் குடிப்பதால்தான் கெடுதல் செய் கிறான். போகட்டும். இதைப் பற்றி அதிகம் சிந்தித்து என்ன பயன். இது இன்றைய அரசியல் பிரச்சனையாகிவிட்டது. அதில் தலையிட்டுத் தனிமனிதன் சிந்தனை எதைச் சாதித்துவிட போகிறது. என் பத்திரிகையில் இதைத் தனியாக நான் எழுத முடியாது; எழுதினால் அரசாங்கத்தை எதிர்ப்பதாகக் கருது வார்கள். அரசாங்கத்தை எதிர்த்துக் கருத்துகளைச் சொல்லத் தான் பத்திரிகைகள் இருக்கின்றன. அந்தத் துணிவு என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/97&oldid=914609" இலிருந்து மீள்விக்கப்பட்டது