பக்கம்:வெறுந்தாள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 97 முதலாளிக்கு இல்லையே. விளம்பரங்கள் தரமாட்டார்கள் என்று அஞ்சுகின்ற பத்திரிகைகள் எவ்வள வோ இருக் கின்றன. பத்திரிகை என்றால் விற்பனை ஆகவேண்டும். எப்படி எழுதினால் நல்லது எதை வெளியிட்டால் 'சர்க்கு லேஷன் அதிகம் அதைப் பற்றித்தான் கவலைப்படுகிறது. அத்தனை பத்திரிகைகளும் திடீர் என்று 'பல்டி அடிக் கின்றன. தனிமனிதர் திடீர் என்று கட்சிகளிலிருந்து மாறி விடும்பொழுது பத்திரிகைகள் எந்த அளவுக்குத் தாக்குப் பிடிக்கும். இதையெல்லாம் பார்க்கும்பொழுது என் கருத்து களைச் சொல்லமுடியாது என்று நினைக்கிறேன். அதற்குப் பத்திரிகை ஆசிரியர் தொழில் முடியாது. அதற்கு நானே ஒரு சொந்தப் பத்திரிகையைத் தொடங்க வேண்டும். அதுதான் சரி என்று பட்டது. இலக்கிய வட்டம் இப்பொழுது கூடுவதே இல்லை. என் உள்ளத்தில் ஒரு சூனியம் இடம் கொள்ள ஆரம் பித்தது. இலக்கியப் பிரச்சனைகளை விவாதிக்கும்பொழுது எவ்வளவு கலகலப்பாக இருந்தது. எங்கள் வீட்டு அறையில் டாக்டரைச் சந்திந்தேன். எதிர்பாராத விதமாகச் சிரித்துக் கொண்டே வந்தார். "She is in the family way என்று கூறினார். அவள் மாற்றத்துக்குக் காரணத்தை அறிந்தேன். அவள் குடும்பப் பெண் ஆகிறாள் என்பதைத்தான் இந்த ஆங்கிலத்தில் சொன்னார். அதாவது அவள் குழந்தைக்குத் தாயாகப் போகிறாள் என்ற செய்தி யைச் சொன்னார். இனி அவள் பாசம் என்பதற்கு விடை காணப்போகிறாள். இனி, அவளுக்குக் குழந்தைதான் பிரச்சனைப் பொருள் ஆகப்போகிறது. அவளது விமரிசனம் எல்லாம் அந்த பூவும் பிஞ்சும் பற்றித்தான் சுற்றப் போகிறது. அவள் இனி எங்கே காய் கனிகளைப் பற்றிப் பேசப்போகிறாள். சமுதாயத்துப் பிரச்சனைகளைப் பற்றி அவள் எங்கே எண்ணப் போகிறாள். எனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/98&oldid=914610" இலிருந்து மீள்விக்கப்பட்டது