உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 வெறுந்தாள் எதையோ பறிகொடுத்தது போன்ற உணர்வு தோன்றியது. அது ஏன் என்று தெரியவில்லை. அவளைப்பற்றி நினைக்க எனக்கு என்ன உரிமை இருக்கிறது. வெறும் விமரிசிகை தானே. ரசிகர்கள் எல்லாம் நீண்டநாள் தொடர்பு கொள்வார்கள் என்பதை எப்படிக் கூறமுடியும். அவர்கள் ரசனை மாறி னாலும் போச்சு என் எழுத்து மாறினாலும் போச்சு. எதுவுமே நிரந்தரம் அல்ல. ஆனால் என் எழுத்து நிரந்தரம் என்பதை எண்ணத் தொடங்கினேன். அதுதான் சாகா இலக் கியம். சமுதாயம் நினைத்துப் பாராட்டிப் பின்பற்றுவது. அதை யாரும் என்னிடமிருந்து பிரிக்க முடியாது. என்பதை உணர்ந்தேன். டாக்டர் மாற்றல் ஆகப்போகிறார் என்று வேறு கேள்விப்பட்டேன். அந்தப் பிஞ்சு முகத்தையும் நான் பார்த்துக் கொஞ்சி விளையாட முடியாது. அவளைத் தாயாகப் பார்த்து என் வாழ்த்தையும் கூறமுடியாது. அவர் சொல்கிறார் “இங்கே திறமைசாலிகளுக்கு வாழ்க்கை இல்லை' என்று. வெளிநாடு செல்ல இருப்ப தாகச் சொல்லிச் சென்றார். ஆம் அதை நினைக்கும்போது வேதனையாகத்தான் இருக்கிறது. இந்த நாட்டிலே பலர் அப்படித்தான் பேசுகிறார்கள். பிறந்த மண்ணில் பாசம் வைக்க முடியாமல் அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லவேண்டி இருக்கிறது. இங்கே எங்களுக்கு எங்கே வேலை இருக்கிறது என்று கேட்கிறார் கள். டாக்டர்கள் பலர் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறார்கள். பட்டம் பெற்ற இளைஞர்கள் வேலை தேடித் திரிந்து அலைகிறார்கள். எங்கள் பத்திரிகை அலுவலகத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். ஏதாவது வேலை கொடுக்க முடியுமா என்று கேட்கிறார்கள். கையில் சர்ட்டிபிகேட்டுகளை வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அந்தத் தாளை நம்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/99&oldid=914611" இலிருந்து மீள்விக்கப்பட்டது