பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 தேவர் கோ அறியாத தேவ தேவன் செழும் பொழில்கள் பயந்துகாத்து அழிக்கும்.மற்றை மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி. என்று மணிவாசகர் பாடினாரே, அந்த தேவதேவனை எங்கெல்லாமோ தேடினோமே. அவன் இங்கேயல்லவா வந்து ஒளிந்து கொண்டிருக்கிறான் என்று காண்போம். இக்கோயிலை சுற்றிவர நல்ல வெளிப்பிரகாரம் அமைத் திருக்கின்றனர். அங்கு சுற்றி வந்து தேவதேவனுக்கு வணக்கம் செலுத்திவிட்டு வெளியில் வந்து தென்பக்கமாக நடந்து சென்றால் சிகரத்தோடு கூடிய பெரிய கோயில் ஒன்றையும் காண்போம். அது மகாவிஷ்ணுவின் கோயிலாக இருக்கும். தேவதேவனுக்கு வணக்கம் செலுத்தியது போல் ம்காவிஷ்ணுவுக்கும் வணக்கம் செலுத்திவிட்டுத் திரும்பும் போது இரண்டு கோயில்களுக்கும் இடையே ஒரு சிறு கோயில் தெரியும். இந்தக் கோயிலை விட்டு விட்டோமே என்று ஆதங்கத்துடன் அக்கோயிலுள் நுழைய விரும்பினால் கோயில் வாயிலில் உள்ள பலகை ஒன்று நம்மை எச்சரிக்கும். மராத்தியில், இக்கோயிலுள் பெண்களும் பாதரட்சை களும் வருதல் கூடாது' என்று எழுதியிருக்கும் இது என்ன? பாதரட்சைகள் வரக்கூடாது என்றால் அர்த்தம் இருக்கிறது. ெப எண்க ள் ஏன் வருதல் கூடாது என்று விசாரித்தால் அங்குள்ள அர்ச்சகர், அது கார்த்திகேயன் கோயில் என்றும் அங்குள்ள கார்த்திகேயன் பிரம்மச்சாரி என்றும் அதனால் அவன் பெண்கள் முகத் திலேயே விழிக்கிறதில்லை என்றும் கூறுவர். சரி என்று உடன் வந்திருக்கும் சகோதரிகளை வெளியே நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தால் அங்கு பளிங்குக் கல்லில் உருவாகியிருப்பவன் நமது அறுமாமுகனே என்று காண் போம், சிறிய வடிவில் மயில் மேல் ஆரோகணித்த