பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187 வனாகவே அவன் இருப்பான். இது என்ன, நம் ஊரில் ஒன்றுக்கு இரண்டாக தேவசேனையையும், வள்ளியையும் மணந்து கொண்டிருக்கும் இந்த கார்த்திகேயன் இங்கே மட்டும் பிரம்மச்சாரி என்று வேடம் போடுவானேன் என்று கேட்கத் தோன்றும், நாம்தாம் பூனா நகரத்தில் பல மராத்தியப் பெண்களைப் பார்த்திருக்கிறோமே. அவர்கள் போட்டிருக்கும் முக்காட்டையும் காதுகளிலும் மூக்கிலும் அணிந்திருக்கும் வளையங்களையும் பார்த்த பின், இந்த அழகிகளைக் காண்பதைத் தவிர்க்கவே இ வ. ன் பிரம்மச்சாரி வேஷம் கொண்டிருக்கின்றான் போலும் என்றே தோன்றும், புண்ணியமா நகர் தன்னில் ஓங்கும் குன்றில் பொலிகின்ற தேவதேவசன் கோயில் கண்ணிஒளிர் ஆறுமுகத் தேவே! மஞ்ங்ைகற் பரிமீது அமர்ந்தருளும் கார்த்திகேயா பெண்ணினத்தில் தமிழ் நாட்டு வள்ளிதனை பெட்புற்றுப் பார்த்த திருவிழியால் ஈங்கே அண்ணனும் மடந்தையர் தம்மைப் பாரேன் என்னும் அதனாலோ அவர் பாராத் தெய்வம் ஆனாய். என்று அவனிடமே கேட்கவும் தோன்றும். இந்த கார்த்திகேயனைத் தரிசித்தப் பின் மலையை விட்டு கீழிறங்கி விடலாம். ஆம். மகாத்மாகாந்தி பல தடவை ஏர்வாடா சிறையில் இருந்தார் என்பார்களே அந்த ஏர்வாடா சிறையும் இப்பக்கத்தில்தானே, அந்த இடத்திற்கு எங்களை அழைத்துச் செல்லவில்லையே என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. அந்த ஏர்வாடாச் சிறை பூனா நகரத்திற்கு கிழக்கே நான்கு மைல் தூரத்தில இருக்கிறது. ஊர் சுற்றிப் பார்க்க கார் ஏற்பாடு