பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. அஜந்தாவின் அந்தப்புரம் சில வருஷங்களுக்கு முன் நமது பிரதமமந்திரி பாண்டித ஜவஹர்லால் நேரு அமெரிக்கா சென்றிருந்தார். அவரை பூரீமதி கோ ல் ட் (இவர் 22 காரட் தங்கமோ அல்லது 14 காரட் தங்கத்தையோ சேர்ந்தவர் அல்ல) என்ற அம்மையார் ஒரு விருந்தில் சத்தித்திருக்கிறார், நான் இந்தியா வருவதாக இருக்கிறேன். அங்கு வந்தால் நான் முக்கியமாக முதன் முதல் பார்க்க வேண்டியது என்ன? : என்று அவர் நேருவிடம் கேட்டிருக்கிறார். நிச்சயமாக *அஜந்தா எல்லோராவைத்தான் என்பதே நமது பிரதம மந்திரியின் பதில்லாக இருந்திருக்கிறது. இப்படி ஒரு தகவல் ஒரு பிரபல அமெரிக்க மாதர் பத்திரிகையில், உண்மைதான். இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுக்காரர் களிடம் நாம் காட்ட வேண்டியது இமயத்தின் சிகரத்தை யும், அகன்று பரந்த கங்கை நதியையும் அல்ல. அவை எல் லாம் இறைவன் அருளால் இயற்கையில் அமைந்தவை. சலவைக்கல் கனவு என்று புகழப்படும் தாஜ்மகாலைக் காட்டக் கூடாதோ? காட்டலாம். அது இந்திய கலாச் சாரத்துக்கோ, இந்திய மண்ணில் ஊறிய கட்டிடக் கலைக்கோ சான்றாக அமையாதே! அதனால்தான் இந்தியனது சிந்தனையில் பிறந்து இந்திய நாகரீகத்திலே தவழ்ந்து, இந்தியப் பண்பாட்டிலே வளர்ந்து, இந்திய மண்ணிலே சிறப்புடன் கொலு விருக்கும் கலைக்கோயில் களைத்தானே காட்ட வேண்டும். அதிலும் சிற்பக்கலை எல்லாம் கிரேக்கர்களிடையேதான், சித்திரக்கலை எல் லாம் இத்தாலியர்களிடையே தான் என்று படித்து, அதே எண்ணத்தில் ஊறி இருக்கும் மேலை நாட்டு ரசிகர்களையும் மூக்கில் விரலை வைத்து அதிசயித்து நிற்கும்படி செய்ய வல்ல கலைக்கூடங்களைத்தானே காட்டவேண்டும். அத்