பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

267 தகைய கலைக்கூடங்களில் தலையாய கலைக்கூடங்கள் தான் அஜந்தாவும், எல்லோராவும். எல்லோராவை நாம் பார்த்துவிட்டோம் சி. ற் ப க் க ைல அங்கு எப்படி பூரணத்துவம் பெற்றிருக்கிறது என்பதையுமே தெரிந்து கொண்டோம். ஆயிரம் வருஷங்களுக்கு முன் இந்திய நாட்டில் சித்திரக் கலை எவ்வளவு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்று தெரிய விரும்பும் எவரும் சென்று காணவேண்டியது அஜந்தாவைத் தான். சிற்பக்கலையின் சிகரத்தில் ஏறி இருந்த தமிழர் சித்திரக்கலையில் அவ்வளவு சிறப்புற்றிருக்கவில்லைதான். தமிழர்களாகிய நாம் பெருமைப்படுவதற்குரிய,சித்திரங்கள் எல்லாம் சித்தன்ன வாசல் குடைவரையிலும் தஞ்சைப் பெருவுடையார் கோயில் கருவறையை சுற்றிய பிரகாரத் திலும், இன்னும் கா ஞ் சி கைலாசநாதர் கோயிலிலும் பனைமலைக் கோயிலிலும் உள்ளவைதானே. இவ்ற்றை எல்லாம் விட அஜந்தா சித்திரங்கள் எவ்வளவு உயர்ந்தது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? அதற்காகவே செல்கிறோம் அஜந்தாவிற்கு. அங்குள்ள குடைவரைகளில் இரண்டையும் பார்த்தோம். இனி மற்ற குடைவரைகளை யும் எல்லாவற்றையும் பார்க்க முடியாவிட்டாலும் முக்கிய மான குடைவரைகளையாவது பார்த்து விட வேண்டாமா? அஜந்தா பெண்கள் பேரழகிகள், அவர்கள் கட்டியிருக்கும் கொண்டையும் அணிந்திருக்கும் ஆடையும் அணிகளும் மிக மிக நேர்த்தியானவை என்றெல்லாம் கேள்விப்பட்டிருக் கிறோமே, அ வ ற் றி ன் உண்மையையும் தெரிந்து கொள்ளுவோமே இன்று. மூன்றாவது குடைவரை முதல் 15-வது குடைவரை வரை விறு விறு என்று பார்த்து விடலாம். இவைகளில் 3-வது 5-வது குடைவரைகள் பூர்த்தியாகாத குடை வரைகள், 4-வது குடைவரையில் ஒரு அவலோகிதேஸ்வரர் சிலை ஒன்று உண்டு. புத்தரும் அவருக்கு இருபுறத்திலும் வஜ்ரபாணியும், பத்மபாணியும் வேறே சிலை உருவில் உரு