பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 வேண்டாம். நேரே 26-வது குடைவரைக்கே நடந்து விடலாம். அங்குதான் புத்தர் மகாபரி நிர்வாணம் அடைந்த காட்சி செதுக்கப்பட்டிருக்கிறது. 24 அடி நீளத்தில் புத்தர் படுத்திருக்கிறார். அவர் பக்கலில் அவரது சிஷ்யர்கள் எல்லாம் துயரம் தேங்கிய முகத்தினராய் அ ம ர் ந் தி ரு க் கி றார் க ள். இங்குதான் புத்தரை மயக்க முனைந்த மாரா ஜாதகக் கதையும் சித்தரிக் கப்பட்டிருக்கிறது. இக்குடைவரையின் சிற்பவடிவங்கள் எல்லாம் ஒரே புத்த மயம் இங்கு மத்தியில் ஒரு ஸ்தூபமும் அதில் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் புத்த விக்கிரகம் ஒன்றும் இருக்கிறது. இந்த புத்தரை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் நின்று பார்க்கலாம். எங்கு நின்றாலும் பார்க்கிறவர்களைப் பார்க்கும் பாவனை உடையவராகவே புத்தர் காணப்படுகிறார். இக்குடை வரைக்கு மேல்புறத்தில்தான் 28, 29 குடைவரைகள் இருக்கின்றன. இவைகளுக்கு செல்ல நல்ல பாதையில்லை. மேலேயுள்ள குடைவரையிலிருந்து வாகூரா நதிக்குள் இறங்கி அதன் பின்னும் மலைப்படிகளில் தத்தித் தத்தி ஏறினால்தான் சென்று காணலாம். அப்படி சிரமத் துடனே சென்று காண்பதற்குத் தகுந்த சிற்பங்களோ சித்திரங்களோ அங்கு இல்லை. காலை 9 மணிக்கு எல்லாம் முதல் குடைவரையில் நுழைந்தோம். 26-வது குடை வரையை விட்டு வெளி வரும் போது கிட்டத்தட்ட, மாலை க் மணி ஆகியிருப்பதாக கடிகாரம் காட்டும். இது வரை பசி, தாகம் எல்லாவற்றையும் அல்லவா மறந்திருக் கிறோம். இனி அக்குடைவரை வாயிலிலேயே அமர்ந்து, கொண்டு வந்திருக்கும் சிற்றுண்டியை ஒருகை பார்க்க வேண்டியதுதான். அதன் பின்னும் நடக்க வேண்டியிருக் கிறதே. முதல் குடைவரையிலிருந்து 26-வது குடைவரை தான் கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் இருக்கும் போலிருக் கிறதே. ஆதலால் சென்ற படியே திரும்பி அஜந்தா மலை அடிவாரத்திற்கு வந்து கார் ஏறி திரும்பவும் ஒளரங்கா பாத்திற்கோ அல்லது ஜால்கன் நகரத்திற்கோ சென்று சேரவேண்டியதுதான்.