பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273 அஜந்தாவில் உள்ள இந்த வண்ண வண்ண ஒவியங்கள் எழுதி எவ்வளவு காலம் ஆயிற்று தெரியுமா? திட்டமாகச் சொல்ல முடியாவிட்டாலும் 1800-வருஷங்களுக்கு குறை வில்லை, என்று தெரிகிறது. இது என்ன சென்ற வருஷம் எழுதிய படம் இந்த வருஷம் மங்கிவிடுகிறது. அப்படி இருக்க இச் சித்திரங்கள் மட்டும் எப்படி அழியாமல் இருக்கிறது. என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? அதுதானே அஜந்தா ரகசியம். அந்த ரகசியத்தை அறியத்தானே பல்லவ சாம்ராஜ்யச் சிற்ப சக்கரவர்த்தி ஆயனர் முயன்றார் என்று அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம்’ என்ற நவீனம் கூறுகிறது. ஆயனாரும் அவரை ஆதரித்த பல்லவ மன்னர் மகேந்திரவர்மனாலும், நரசிம்மவர்மனாலும் காணமுடியா மல் போனதை நம்மால் கண்டுபிடிக்க முடியவா போகிறது? இருந்தாலும் சிற்பவல்லுநர்கள் சொல்வதை மட்டும் சொல்லிவிட்டு நான் நின்று கொள்கின்றேன். மேலும் ஒரு சந்தேகம். வெட்டிச் செதுக்கிய பாறையில் இந்த வர்ணங் களை எப்படித் தீட்டமுடிந்தது, என்று ஒரு கேள்வி. இதற்கும் விடை சொல்கிறார்கள் இன்றைய சிற்ப வல்லுநர்கள். பாறையை வெட்டிச் செதுக்கிய பின் அதன் மேல் கண்ணாம்புக்கொண்டு பூசி சமதளம் ஆக்கிக் கொண்டு அதன் மேல் பச்சிலைச் சாற்றையும் வண்ணக் கற்களின் பொடியையும் சேர்த்து அரைத்த கலைவையைக் கொண்டு இச்சித்திரங்கள் திட்டப்பட்டிருக்க வேண்டும். அப்படி தீட்டப்பட்டதின் காரணமாகத்தான் அவை அழியாதிருக்கின்றன, பல இடங்களில் காரை பெயர்ந்து விழுந்து பின்னும்கூட. இன்னும் எவ்வளவு காலம் இச் சித்திரங்கள் நிலைத்து நிற்கும் என்று சோதிடம் சொல்ல நம்மால் இயலாது. ஆனால் ஒரு தடவை பார்த்தவர்கள் உள்ளத்தில் என்றும் அழியாத வண்ண ஒவியமாக அது நிலைத்து வருகிறது. இது போதாதா என்ள?