பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

15. நாடோடியாகத் திரிதல்; நிலையின்றி இடம் பெயரும் பழங்குடியினர்.
16. பித்துநிலை மற்றும் மனநலக்கேடு-பித்தர்கள், மனநலக்கேடுடையவர்கள் ஆகியவர்களை ஏற்றுக்காப்பதற்கான அல்லது அவர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கான இடங்கள் உள்ளடங்கலாக.
17. விலங்குகளுக்குக் கொடுமை இழைப்பதைத் தடுத்தல்.
17அ. வனங்கள்.
17ஆ. வன விலங்குகளையும் பறவைகளையும் பாதுகாத்தல்.
18. உணவுப் பொருள்களிலும் பிற சரக்குகளிலும் கலப்படம்.
19. மருந்துப் பொருள்களும் நச்சுப் பொருள்களும், அபினைப் பொறுத்தவரை, I ஆம் பட்டியலின் 59 ஆம் பதிவிலுள்ள வகையங்களுக்கு உட்பட்டு.
20. பொருளாதார மற்றும் சமுதாயத் திட்டமிடுதல்.
20அ. மக்கள்தொகைக் கட்டுப்பாடு மற்றும் குடும்பநலத் திட்டம்.
21. வாணிப மற்றும் தொழில்துறையில் ஒரு தனியுரிமை நிறுவகங்கள்; இணையங்கள் மற்றும் பொறுப்புக்கட்டளைகள்.
22. தொழிற்சங்கங்கள்; தொழில்துறை மற்றும் தொழிலாளர் பூசல்கள்;
23. சமுதாயப் பாதுகாப்பு மற்றும் சமுதாயக் காப்பீடு ; வேலையமர்த்தம் மற்றும் வேலையின்மை.
24. தொழிலாளர் நல்வாழ்வு-வேலை நிலைமைகள், வருங்காலக் காப்பு நிதியங்கள், வேலைக்கமர்த்துவோரின் கடப்பாடு, உழைப்பாளர்களுக்கான சரியீடு, உடல்ஊனம் மற்றும் முதுமைக்கால ஓய்வூதியங்கள், மகப்பேறுகால நலன்கள் உள்ளடங்கலாக.
25. கல்வி: I ஆம் பட்டியலின் 63, 64, 65, 66 ஆகிய பதிவுகளின் வகையங்களுக்கு உட்பட்டு தொழில்நுட்பக்கல்வி, மருத்துவக் கல்வி, பல்கலைக்கழகங்கள் உள்ளடங்கலாக; தொழிலாளருக்கு உறுதிதொழிற்பயிற்சியும் தொழில்நுட்பப் பயிற்சியும்.
26. சட்ட, மருத்துவ மற்றும் பிற விழைதொழில்கள்.
27. இந்தியா மற்றும் பாகிஸ்தான் தன்னாட்சியங்கள் ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக முன்பிருந்த உறைவிடத்திலிருந்து இடம்பெயர்ந்து சென்றவர்களுக்கான தீருதவி மற்றும் மறுவாழ்வளிப்பு.
28. அறப்பணிகள் மற்றும் அறப்பணி நிறுவனங்கள்; அறப்பணி மற்றும் சமயக் கட்டளைகள்; சமய நிறுவனங்கள்.
29. மனிதரை, விலங்குகளை அல்லது செடியினங்களைப் பீடிக்கும் தொற்று நோய்கள் அல்லது ஒட்டுநோய்கள் அல்லது நச்சுப்பூச்சிகள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொன்றிற்குப் பரவுவதைத் தடுத்தல்.
30. பிறப்பு-இறப்புப் புள்ளிவிவரங்கள்; பிறப்பு இறப்புகளைப் பதிவு செய்தல் உள்ளடங்கலாக.
31. துறைமுகங்கள்-நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தாலோ அதன் வழியாலோ அல்லது விளம்பப்பட்டவை நிலவுறும் சட்டத்தாலோ அதன் வழியாலோ பெருந்துறைமுகங்கள் என நீங்கலாக.
32. எந்திரத்தால் உந்தப்படும் கலங்களைப் பொறுத்து, உள்நாட்டு நீர் வழிகளில் கப்பல் போக்குவரத்தும் கப்பல் பயணமும் அத்தகைய நீர்வழித் தடவிதிகளும்; மற்றும் தேசிய நீர்வழிகளைப் பொறுத்து I ஆம் பட்டியலின் வகையங்களுக்கு உட்பட்டு, உள்நாட்டு நீர்வழிகளில் பயணிகளையும் சரக்குகளையும் ஏற்றிச் செல்லுதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/274&oldid=1466847" இலிருந்து மீள்விக்கப்பட்டது