பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

249


33.

(அ) ஒன்றியத்தின் கட்டாள்கையில் இருப்பது பொது நலனுக்கு உகந்தது என நாடாளுமன்றம் சட்டத்தினால் விளம்பும் விசைத்தொழில் எதனின் ஆகுபொருள்கள் மற்றும் அதே ஆகுபொருள்களின் வகையைச் சேர்ந்த இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகள்,
(ஆ)உண்தகு எண்ணெய் வித்துக்களும் எண்ணெய்களும் உள்ளடங்கலான உணவுப்பொருள்கள்.
(இ)பிண்ணாக்கு மற்றும் பிற செறிமங்கள் உள்ளடங்கலான கால்நடைத் தீவனம்,
(ஈ)கொட்டை நீக்கப்பட்டதாகவோ கொட்டை நீக்கப்படாதாகவோ உள்ள பண்படுத்தப்படாத பருத்தி மற்றும் பருத்திக்கொட்டை,
(உ)பண்படுத்தப்படாத சணல்.

இவற்றில் வணிகமும் வாணிபமும், இவற்றை விளைவித்தலும் வழங்குதலும் பகிர்ந்தளித்தலும்.

33அ. எடைகளும் அளவுகளும்-தரநிலைகளை நிருமிப்பது நீங்கலாக.
34. விலைவாசிக் கட்டுப்பாடு.
35. எந்திரத்தால் உந்தப்படும் ஊர்திகள்-அத்தகைய ஊர்திகள் மீதான வரிகள் விதிக்கப்படவேண்டிய நெறிகள் உள்ளடங்கலாக.
36. தொழிற்சாலைகள்.
37. கொதிகலன்கள்.
38. மின்விசை.
39. செய்தித்தாள்கள், நூல்கள் மற்றும் அச்சகங்கள்.
40. தொல்பொருளாய்விடங்களும் சிதைவுகளும்-நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தாலோ அதன் வழியாலோ தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என விளம்பப்பட்டவை நீங்கலாக.
41. நாடுவிட்டு அகன்றோர் சொத்து எனச் சட்டத்தினால் விளம்பப்பட்ட (வேளாண் நிலம் உள்ளடங்கலான) சொத்தினைக் கையடைவு கொள்ளல், மேலாண்மை செய்தல் மற்றும் அயலடைவு செய்தல்.
42. சொத்தினைக் -கையகப்படுத்தலும் வேண்டுறுத்திப் பெறுதலும்.
43. வரிகளையும், ஒரு மாநிலத்திற்கு வெளியே எழுகின்ற நில வருவாய் நிலுவைகளும் அத்தகைய நிலுவைகளாக வசூலிக்கத்தக்க பணத்தொகைகளும் உள்ளடங்கலாக அரசுக்கு வரவேண்டியவற்றைப் பொறுத்துக் கோரப்படும் தொகைகளையும் அந்த மாநிலத்தில் வசூலித்தல்.
44. நீதிமன்ற முத்திரைத்தாள் வகையில் ஈட்டப்படும் தீர்வைகள் அல்லது கட்டணங்கள், முத்திரைத் தீர்வைகள், ஆனால், முத்திரைத் தீர்வை வீதங்கள் நீங்கலாக.
45. IIஆம் பட்டியலில் அல்லது 11ஆம் பட்டியலில் குறித்துரைக்கப்பட்ட பொருட்பாடுகளில் எதனையும் பொறுத்த விசாரணைகளும் புள்ளிவிவரங்களும்.
46. இந்தப் பட்டியலிலுள்ள பொருட்பாடுகளில் எதனையும் பொறுத்து, உச்ச நீதிமன்றம் நீங்கலாக, அனைத்து நீதிமன்றங்களின் அதிகாரவரம்பும் அதிகாரங்களும்.
47. இந்தப் பட்டியலிலுள்ள பொருட்பாடுகளில் எதனையும் பொறுத்த கட்டணங்கள், ஆனால், நீதிமன்றம் எதிலும் பெறப்படும் கட்டணங்கள் நீங்கலாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/275&oldid=1466849" இலிருந்து மீள்விக்கப்பட்டது