பன்னிரு திருமுறைகள்
Appearance
பன்னிரு திருமுறைகள் என்பவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். இவை திருமுறைகள் என்றும் அறியப்படுகின்றன. இவை மொத்தம் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன.
10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.
திருமுறைகள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களிலும், சமய நிகழ்ச்சிகளின் போதும் திருமுறைகள் இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன.
பன்னிரு திருமுறைகள்
[தொகு]பட்டியல்
திருமுறைகளில் பாடல்களின் எண்ணிக்கை
[தொகு]திருமுறை | பாடியவர்(கள்) | பாடல் எண்ணிக்கை |
---|---|---|
முதலாம் திருமுறை | திருஞானசம்பந்தர் | 1,469 |
இரண்டாம் திருமுறை | திருஞானசம்பந்தர் | 1,331 |
மூன்றாம் திருமுறை | திருஞானசம்பந்தர் | 1,380 |
நான்காம் திருமுறை | திருநாவுக்கரசர் | 1,070 |
ஐந்தாம் திருமுறை | திருநாவுக்கரசர் | 1,016 |
ஆறாம் திருமுறை | திருநாவுக்கரசர் | 981 |
ஏழாம் திருமுறை | சுந்தரர் | 1,026 |
எட்டாம் திருமுறை | மாணிக்கவாசகர் | 1,058 |
ஒன்பதாம் திருமுறை | 9 ஆசிரியர்கள் | 301 |
பத்தாம் திருமுறை | திருமூலர் | 3,000 |
பதினொன்றாம் திருமுறை | 12 ஆசிரியர்கள் | 1,385 |
பன்னிரண்டாம் திருமுறை | சேக்கிழார் பெருமான் | 4,286 |
மொத்தம் | 18,303 |
திருமுறை பாடிய சிவனருள் சிவனடியார்கள்
[தொகு]வரிசை | திருமுறையாசிரியர் | திருமுறை | பாடல்கள் |
---|---|---|---|
1. | திருஞானசம்பந்தர் | 1,2,3 | 4180 |
2. | திருநாவுக்கரசர் | 4,5,6 | 3067 |
3. | சுந்தரர் | 7 | 1026 |
4. | மாணிக்கவாசகர் | 8 | 1058 |
5. | திருமாளிகைத் தேவர் | 9 | 44 |
6. | கண்டராதித்தர் | 9 | 10 |
7. | வேணாட்டடிகள் | 9 | 10 |
8. | சேதிராயர் | 9 | 10 |
9. | பூந்துருத்தி நம்பிகாடநம்பி | 9 | 12 |
10. | புருடோத்தம நம்பி | 9 | 22 |
11. | திருவாலியமுதனார் | 9 | 42 |
12. | சேந்தனார் | 9 | 47 |
13. | கருவூர்த் தேவர் | 9 | 105 |
14. | திருமூலர் | 10 | 3000 |
15. | திரு ஆலவாய் உடையார் | 11 | 1 |
16. | கல்லாடதேவ நாயனார் | 11 | 1 |
17. | அதிராவடிகள் | 11 | 23 |
18. | ஐயடிகள் காடவர்கோன் நாயனார் | 11 | 24 |
19. | இளம்பெருமான் அடிகள் | 11 | 30 |
20. | பரணதேவ நாயனார் | 11 | 101 |
21. | சேரமான் பெருமான் நாயனார் | 11 | 11 |
22. | கபிலதேவ நாயனார் | 11 | 157 |
23. | காரைக்கால் அம்மையார் | 11 | 143 |
24. | பட்டினத்தார் | 11 | 192 |
25. | நக்கீர தேவ நாயனார் | 11 | 199 |
26. | நம்பியாண்டார் நம்பி | 11 | 382 |
27. | சேக்கிழார் பெருமான் | 12 | 4286 |