பக்கம்:இதுதான் திராவிடநாடு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

இதுதான் திராவிடநாடு

வடதிசைப் போலித் தேசியம் அவர் பண்பையும் மறைத்துப் பெயரையும் இருட்டடித்து வருவது தமிழர்களனைவரும் அறிந்ததேயாகும்.

11. கீழ்திசை நாகரிக ஒற்றுமை
தென்னகத்தின் நிழலே

'திராவிடநாடு எது, எங்கே' என்ற கேள்வி இவ்வாறாக ஒரு புதிய தேசியம் பற்றிய பழைய தேசியத்தின் கேள்வியல்ல. ஒரு பழம்பெரும் தேசியம்பற்றிய ஒரு புதிய, இன்னும் உருவாகாத, என்றும் உருவாக முடியாத ஒரு போலித் தேசியத்தின் கேள்வியே, யாகும். உண்மையில் கேள்வி கேட்பவர் உள்ளத்தில் நிழலுருவாக ஊசலாடும் போலி ஒற்றுமைக் குறிக்கோள், போலித்தேசியக் குறிக்கோள்கூடத் திராவிட நாட்டின் ஒற்றுமையின் ஒருவிரிந்த நிழலேயன்றி வேறன்று.

இன்று இந்தியாவில் காணப்படும் பரந்த ஒற்றுமைபோன்றதே ஐரோப்பாவின் ஒற்றுமை. அது ஐரோப்பாவின் ஒற்றுமையைவிட மிகக் குறைந்ததே என்று சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரி போன்ற அறிஞர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஐரோப்பாவில் காணப்படும் நாகரிக ஒற்றுமையை நாம் முனைப்பாக மேற்கிலும் தெற்கிலும் காண்கிறோம். வரலாற்றில் அது தென்கிழக்கிலிருந்து தென்மேற்கு, மேற்கு வடமேற்காக வலஞ் சுழித்துச் சென்று, மற்ற திசைகளில் பரவுவது காணலாம். அதுபோல, ஒரு கண்டம், ஒரு குட்டி உலகம் என்ற அளவில்கூட இந்தியாவில் (இந்தியக் கூட்டுறவு, பாகிஸ்தான் உட்பட்ட பரப்பில்) காணப்