பக்கம்:இதுதான் திராவிடநாடு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுதான் திராவிடநாடு

39

கி. மு. 4-ஆம் நூற்றாண்டில் வட திசையில் வாழ்ந்ததாகக் கூறப்படும் தென்னகப் பார்ப்பன அறிஞராகிய சாணக்கியர், தம் காலத்தில் விலையேறிய ஏற்றுமதி வாணிகத்துக்கும் செல்வ நிலைக்கும் தென்னாடு பேர்போனது என்பதையும், வடதிசை வாணிகம் அத்தகு சிறப்பு ஒரு சிறிதும் அற்றதாக இருந்தது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். 14-ஆம் நூற்றாண்டில் தென்னகம் வந்த வெளிநாட்டு யாத்திரிகரான மார்க்கோபோலோவும் இபன்பதூதாவும் வஸஃவ்வும் இதே நிலை அணிமைக் காலத்திலும் இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர். செல்வ வளமும் அரசியலாற்றலும் மிகுந்த தென்னகத்தைப் பெரிய இந்தியா என்றும், அது குன்றிய வடதிசையைச் 'சிறுமை இந்தியா' என்றும் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர்.

விசயநகரப்பேரரசர் நீங்கலாகத் தென்னக அரசர், பேரரசர் யாவருக்கும் இருந்த கடற்படை வடதிசை அரசர்கள, பேரரசர்கள் எவரும்- அசோகன் முதல் அவுரங்கசீப்வரை எவருமே-அறியாத ஒன்று. உண்மையில் வடதிசைப் பரப்பு நில எல்லையில்கூட வீர மரபு பேணாது, நடு ஆசியாவின் பண்படாக்குடிகளின் குடியெழுச்சிகளுக்கும் படையெழுச்சிகளுக்கும் வாயில் திறந்து வைத்து, தான் கெட்டதுடன் நில்லாது தென்னகத்தின் வீரமரபிலும் கடல் மரபிலும் சமயப் போர்வையில் புகுந்து கேடு சூழ்ந்தது. அதன் பயனாகவே கடைசித் தென்னகப் பேரரசரான விசய நகரப் பேரரசரும் 16-17-ஆம் நூற்றாண்டுத் தென்னகமும் பழைய வீர மரபு கடல் மரபு இரண்டும் பெரிதளவு மறந்து வெள்ளையர் கடல்வழி வரவுக்கு இடந்தர நேர்ந்தது என்னலாம்.

தென்னகத்தேசியத்தில் கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம் இம்மரபு புதுப்பிக்க எண்ணியும்