பக்கம்:அஞ்சலி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ


திடீரெனப் புதுவிதமாய் எனக்குக் கண்கள் திறந்தாற் போலிருந்தது. விழிமேல் படர்ந்த மெல்லிய சதையைப் பிய்த்தெறிந்தாற்போல். இமையோரங்கள் உட்புறம் அவ்வளவு வலித்தன. தலையை உதறிக்கொண்டேன். ‘விர்’ரென மாலைக் காற்று விழியோரங்களின் உள்பாய்ந்து கண்கள் திடீரெனச் சில்லிட்டன.

கதிர்கள் காற்றில் அலைந்தன. தென்றலின் ஒவ்வொரு மோதலிலும் அவை நீண்ட பெருமூச்செறிந்தன. அவை ஏதோ எனக்கோ தமக்கோ சொல்ல முயன்றன. புரியாதவொரு இன்பக்கிலேசம் என் மார்புள் அமிழ ஆரம்பித்தது. பெருமூச்சுடன் புத்தகத்தைக் கீழே வைத்தேன். ஏடுகள் படபடவென அடித்துக்கொண்டன. அவையும் ஏதோ சொல்ல முயன்றன.

அதே வயல்கள் தாம். அதே பச்சைக் கதிர்கள்தாம். அதோ தூரத்தில் ஏற்றத்தை இறக்கிக் கட்டிய உறை கிணறுதான் இப்பவும். ஒருவரும் அதைத் தூக்கிக்கொண்டு போய்விடவில்லை. ஆனால் எல்லாமே ஏதோ முறையில் மாறியிருந்தன. திடீரென ஏதோ ஒரு மந்திரக்கோல் பட்டு, உயிர்பெற்று மூச்சுவிட ஆரம்பித்துவிட்டன.

இருந்தாற்போல் இருந்து கதிர்களின் பச்சைகளினிடையில் வெள்ளை அசைவுகள் ஒருமித்து ஒன்றே ஆகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/159&oldid=1026537" இலிருந்து மீள்விக்கப்பட்டது