உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா காவியம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கண்ணீர்த் துளிகள்
99

சென்னைமுதல் குமரிவரை இடையி லுள்ள்
சீர்மிகுந்த மாவட்டம் வாழும் தொண்டன்

என்னையுமா மறந்துவிட்டார் தந்தை? அந்தோ!
என் செய்வேன்? இத்தனைநாள் உழைப்பும் வீணா?

சின்னவனாய்த் திரிந்தபோதில் ஈர்க்கப் பட்டுத்
தெருவாரின், ஊராரின் திட்டுக் கேட்டு,

முன்னெவரும் முன்வராத காலந் தொட்டு
முயன்றுபெருங் கூட்டத்தைச் சேர்த்தேன்! என்றான்!



"இவ்வியக் கத்தில் இருக்கிற பெண்டிரில்
அவ்வைபோல் நான்தான் அதிக வயதினள்!
பெரியா ருக்கொரு திருமணம் வேண்டுமேல்
சரியான மணப்பெண் இராமா மிர்தமே!"
என்னையேன் மறந்தார்? எனமூ தாட்டியார்
சொன்னார்! சுடச்சுடச் செய்தித் தாள்களில்
அன்று அவர் அறிக்கை சென்றது; "மிகமிக
நன்றே? இதுநாள் நம்பிய எங்களைத்
தந்தையே வெறுத்தல் தகுமோ? முறையோ?
இந்தக் கொள்கையா ஏற்புடைத் தாம்?” என
நொந்த மனத்தினின்று வந்த கண்ணீர்த்
துளிகள் ஆறெனத் தொடர்ந்து பெருகின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/101&oldid=1079722" இலிருந்து மீள்விக்கப்பட்டது