உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா காவியம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

அண்ணா காவியம்

பெரியார் செய்கை சரியெனச் சொல்பவர்

சிறுபாலர் எனினும், பெருந்தன்மை யோடும்...

துண்டை உதறித் தோளிலே போட்டுத்

தொண்டே முதலாய்த் துணிவே துணையாய்க்

கண்ணீர்த் துளிகள் கண்ணியத் துடனே

எண்ணிய எய்திட ஏகுவோம் வெளியே!

என்னையே நம்பி என்பின் வருவோர்

அன்புடன் வருக; அழைத்துச் செல்வேன்!”

அண்ணன் மொழிந்தார்! அதுவரை அழுதவர்

கண்ணைத் துடைத்துக் கடமை தொடர்ந்திடத்

திண்ணிய நெஞ்சுடன் தென்புபெற் றவராய்ச்

சென்னையில் திரண்டனர் எண்ணிலாத் தோழர்!



நெடுஞ்செழி யன்,செழியன்.அன்பழகன்,
கனிச்சொல் கருணா நிதி,சிற் றரசு,
ஆசைத் தம்பி,வா ணன்,மதியழகன்,
பேசும் சம்பத், பாச நடராசன்,
சண்முகம், போளுரார், சாரதி, தேவராசன்,
சம்பங்கி, முல்லைச் சகோதரர், கிருட்ணசாமி,
பேளுக் குறிச்சியார், கிருட்டினன், கண்ணன்,
நீளுயர் இராசமா ணிக்கம், நாராயணன்,
சித்தையன், திருப்பூர் சுப்பிர மணியம்,
பெத்தாம் பாளையம், ஆவுடை யப்பன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/102&oldid=1079730" இலிருந்து மீள்விக்கப்பட்டது