பக்கம்:அண்ணா காவியம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வணக்கம்


அண்ணனை:அறிவின் உச்சி

அமைந்தால் அன்பின் ஊற்றைக்:

கண்ணியம் கட்டுப் பாடு

கடமையால் தந்த கோவைத்:

திண்ணிய தமிழர் நெஞ்சில்

திராவிட உணர்வை ஊன்றி-

எண்ணமும் செயலும் ஒன்ற-

இணையில் நாகரிகம் சேர்ந்த


அரசியல் பொருளாதாரம்

அருஞ்சமு தாயம் மூன்றில்

விரசமே கலவா வண்ணம்

விளைத் திட்ட வேங்தை; வெற்றி

முரசமே முழக்கி நாளும்

முன்னேற்றப் பாதை கண்டு.

சரசமாய்ப் பழகி, நன்மை

சாதித்த சான்றோன் தன்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/23&oldid=1078530" இலிருந்து மீள்விக்கப்பட்டது