பக்கம்:அண்ணா காவியம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அண்ணா காவியம்

22

நேர்மையால், நீதிக் கொள்கை

நிறைந்திடும் நெஞ்சு கொண்ட

நீர்மையால், நிமிர்ந்த நோக்கம்

நிரம்பிய நிகரில் லானைக்

கூர்மதி, கொடுமை கொன்று

குவலயந் தழுவுங் கேண்மை,

பார்முழு தேற்கும் பண்பால்

பகையிலாப் பெருமான் தன்னை


ஈடிலாக் குடும்ப பாசம்

எழிலுடன் இசையும் மேன்மை,

கேடிலாத் தூய திட்டம்

கீழோரை உயர்த்து தற்கு,

நாடியே மக்கள் ஈண்ட

நல்கிய சொல்வல் லானைப்

பாடியே புகழை ஈட்டப்

பணிவுடன் வணங்கு கின்றேன்!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/24&oldid=1078540" இலிருந்து மீள்விக்கப்பட்டது