பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43


வயிற்றுக் கஞ்சிக்குக் குறைவில்லாமல் வாழலாம் என்று ஆசைப்பட்டுத்தான் சென்றனர்!

அவ்விதம் சென்றவர்களிலே ஒருவன்தான் மணி.

மணி என்பது செல்லப் பெயர்...முழுப் பெயர் சிவ சுப்பிரமணியம்!

'அவர்' இருந்தால் ஆயிரம் ஆயிரமாகக் கொட்டிக் கொடுத்தாலும் உன்னை 'அக்கரைக்கு' அனுப்பமாட்டார் என்று கூறிக் கதறி, பிறகு மணியின் நெற்றியிலே பிள்ளையார் கோவில் ஐயர் கொடுத்த (ஒரு அணாவுக்கு) விபூதியைத் தடவி, ஆயிரம் தெய்வங்களை வேண்டிக் கொண்டு விடை கொடுத்தனுப்பினாள் கிழவி.

எப்போதாவது கொஞ்சம் 'போடும்', வழக்கம் உண்டு மணிக்கு!

அக்கரை சென்றதும், அந்த ரகமானவர்களின் 'நேசம்' அதிகமாகி, 'போடுவதும்' வேகமாக வளர்ந்தது--அது அவனைப் படாதபாடு படுத்திவிட்டது... கல்லறை அவனை அழைத்துக்கொண்டது.

கிழவிக்குத் தன் 'மகன்' அக்கரையில் இருப்பதாக நினைப்பு.

'யாரிட்ட தீவினையோ, என்னை அவன் மறந்து விட்டான்' என்று எண்ணி வருந்தினாள்.

ஆயிரம் தெய்வங்களை மறுபடியும் மறுபடியும் வேண்டிக் கொண்டாள். தெய்வங்களுக்கு அதுதானா வேலை! ஒரு திருவிழா முடிந்ததும் மற்றோர் திருவிழாவுக்குத் தங்களைத் தயாராக்கிக் கொள்வதற்கே காலம் போத-