பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20. வேந்தன் புலவோர்க்கு விருந்துசெய் காதை

அரசன் அமைச்சனை அழைத்துக் கூறுவான்:
அம்பிகாபதி குறித்தும் அமராவதி பற்றியும்
ஊரில் வம்பலர் உரைக்கப் படுவதை
நேரில் கேட்டு நேற்றிரா அறிந்தேன்

5 அம்பிகா பதியும் அமரா வதியும்
தும்பியும் பூவுமாய்த் தொடர்ந்து துய்ப்பதாய்
நம்பச் சான்று நம்மிடம் இல்லை.
பன்முறை சென்று வேவு பார்த்தும்
நன்முறை யாயென் மகளும் நடப்பதாய்

10 அறிந்துளோம் ஆதலின் அவர்தம் களவைத்
தெரிந்து கொள்ளத் திட்டம் யாதென,
அமைச்சன் மொழிவான்: அலருள துண்மை;
நமைச்சார்ந் துநிற்கும் நாட்பழி தீரத்
திட்டம் ஒன்று தெரிவிப் பேனியான்;

15 எட்டுப் பக்கலும் இசையது போய்
இந்த நகருள இன்றமிழ்ப் புலவோர்.
நந்தம் அரண்மனை நண்ணி உயர்ந்த
விருந்தொன் றருந்த வேண்டி யவர்க்கே
சிறந்த அழைப்பினைச் செவ்விதின் விடுப்போம்.

20 விருந்தில் படைப்பவர் விரும்புமும் மகளே!
அருந்தும் போழ்தில் அனைவர்க்கும் நடுவண்
அம்பிகா பதியும் அமரா வதியும்
நடந்து கொள்ளும் நடைமுறை கண்டு


13. நாட்பழி -நெடு நாளாய் இருந்து வரும் பழி.15.பக்கல்- இசை-புகழ். இசையது போய் - புகழ் பரவிய. 20. கடைப்பவர் - பரிமாறுபவர்.