பக்கம்:அழகர் கோயில்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அட்டவிசேஷம். கோடைத்திருநாள் சித்திரைப்பெருந்திருவிழா 363 பல்லக்கின் மேல் பண்ணாங்கை 24 அவிழ்த்தும் பல்லக்கு கொம்புகளை கீழ்ப்பாகமாக சேர்த்தும், மண்டபதாரருக்கு மரியாதையானவுடன் பெருமாள் இந்த மண்டப முதல் எழுந்தருளும் சேவையை 'எதிர் சேவை' என்று பக்தர்கள் கொண்டாடி தரிசிப்பார்கள். பின் பெருமாள் தல்லாகுளம் மாரியம்மன் கோவில் மாரியம்மனுக்கு கோரா அருதிப் பரிவட்டம் மரியாதை செய்து பின் பெருமாள் அம்பலகாரர் மண்டப முதல் வழிநடை மண்டபங்களில் மண்டபக் காணிக்கை செலுத்தின மண்டபங்களில் எழுந்தருளி மண்டபதாரருக்கு மரியாதை செய்வித்து பின் பெருமாள் தல்லாகுளம் பெருமாள் கோவில் சேர்ந்து அலங்காரம் களைத்து திரு வாபரணங்களை சவ்வாரி கையாக்ஷி பெட்டியில் சேர்த்து திருமஞ்சன மாகி திருவாராகனம் தளிகை அமுதுசெய்துலாளி ஸ்ரீபட்டர்18 திருவா பரணங்களை சவாரி கையாக்ஷியில் ஒப்புக்கொண்டு குதிரை வாகனத் தில் அலங்காரம் செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருமாலை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்து பொருமாளுக்கு ஓடி மாலை சாத்தி திருவாராதனம் தளிகை அமுது செய்தல். பின் ஸ்ரீஆண் டாளுக்கு பெருமாள் வெகுமானமாக சாதாரா,26 ஏகாந்தம், 21 காங்கு, 20 ஜென்டி 20 கோரா வகையறாக்களை கொடுத்தபின் ஆண் டாள் திருமாலை எழுந்தருளப்பண்ணி வந்தவர்களுக்கு30 கோராப் பரி வட்டம் மரியாதை செய்வித்து அதிகாரிகளுக்கும் மரியாதை செய்வித்து பட்டருக்கு வாகன அருதிப்பரிவட்டம் மரியாதையாகி பெருமாள் குதிரைவாகனாரூடராய் தல்லாகுளம் கோவிலிலிருந்து புறப்படுதல். பின் முதல் மண்டபம் ஸ்ரீ ரெங்கராஜப்பட்டருக்கு மண்டபத் திற்கு எழுந்தருளி கோரா பரிவட்டம் மரியாதை செய்வித்து வழக் கம்போல் மண்டகப்படிகளில் மண்டப காணிக்கை செலுத்திய மண்டபங்களுக்கு பெருமாளை எழுந்தருளச்செய்தும் ஆண்டார், தோழப்பய்யங்கார் மண்டபங்களிலும்31 யெழுந்தருளிச் செய்து கோராப் பரிவட்டம் மரியாதை வகையறா செய்தும் வழக்கம்போல் மண்டபங் களுக்கும் எழுந்தருளியாகி தல்லாகுளம் கோவிலைச் சுற்றிவந்து பின் வெற்றிவேர் சப்பரத்தில் குதிரை வாகனத்துடன் எழுந்தருளியாகி கருப்பணசுவாமி கோவில் வரை வெற்றிவேர் சப்பரத்துடன் வழிநடை மண்டபங்களிலும் எழுத்தருளி புறப்படுதல். கருப்பண சுவாமி கோவில் முன் பெருமாள் வையாளியிட்டு32 கருப்பண சுவாமிக்கு மாலை கோராப்பரிவட்டம் மரியாதை செய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/370&oldid=1468253" இலிருந்து மீள்விக்கப்பட்டது