பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#04 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

டாக்டர் கிருஷ்ணதன் கோஷ் கொடைக்கு வரம்பு கிடையாது. கையிலிருக்கும் பணம் காலியானாலும் பரவா யில்லை என்ற எண்ணத்திலே, தன்னிடம் இல்லையென்று வந்த வறுமையாளர்களுக்குத் தான்ம் செய்யும் தாராள சுபாவம் உடையவர்.

இந்த வரம்பிலா தான் தர்மத்தால், அயல்நாட்டில் கல்வி கற்று வந்த அவரது மகன்கள், சிலநேரங்களில் உணவுக்கும்கூட கஷ்டப்பட்டதுண்டு. ஏன் தெரியுமா?

வந்தவர்கட்கும், கேட்டவர்கட்கும் கையிலுள்ள பணத்தைக் கொடுத்து விட்டு, அயல்நாட்டில் படிக்கும் தனது பிள்ளைகளுக்குக் குறிப்பிட்டக் காலத்தில் பணம் அனுப்ப முடியாமல் திண்டாடுவார்; திணறுவார்.

இதுபோன்ற காலங்களில், அயல்நாட்டில் படிக்கும் அவருடைய மக்கள், சாப்பாட்டுக்கும் அல்லல்பட்டுப் பட்டினி கிடப்பார்கள். இத்தகைய செயற்கைப் பட்டினிகளில் அரவிந்தர், பல நேரங்களில் தொல்லைகளை அனுபவித்தார். ஆனால், கல்வியில் மட்டும் அவர் கவனக்குறைவாக இல்லாமல், பசி பட்டினியும் பாராமல் படித்துக் கொண்டே வந்தார்.