பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

பரோடா மன்னருடன் தாய்நாடு திரும்பினார்:

பரோடா மன்னர் கெய்க்வார்; அவரும் இங்கிலாந்திலே இலண்டன் மாநகரிலுள்ள அவரது மாளிகையில் இருந்தார்.

அரவிந்த கோஷின் அறிவுக் கூர்மையினையும், பன்மொழிப் புலமையினையும் கேள்விப்பட்ட மன்னர், அவரைச் சந்திக்க அரவிந்தர் தங்கியிருந்த இடத்துக்கு வந்தார். மன்னர் ஒருவர் சாதாரண ஒரு மாணவனைத் தேடி வருவதா? என்ற எண்ணத்தின் வேரோடாத நெஞ்சம் படைத்த கல்விக் கோமான் அந்த மன்னர்! அதனால், அறிவாலயத்தைத் தேடி வரும் ஓர் அன்பரைப்போல, அரசர் கெய்க்வார் அறிவைத் தேடி வந்தார். அறிவை நாடுபவருக்கு அரசனும்-ஆண்டியும் ஒன்றுதான்ே!

அரவிந்தரும் - மன்னரும் சந்தித்து உரையாடினார்கள். அரவிந்தருடைய அறிவாழப் புலமையைக் கண்டு மன்னர் அளவிலா மகிழ்வடைந்தார். இலண்டன் மாநகர் மாளிகை யிலிருந்தபடியே அரவிந்தகோஷை தமது சமஸ்தான்த்திலுள்ள அரசுப் பணியிலே நியமித்தார். அவரைத் தம்மோடு அழைத்துக் கொண்டு பரோடா மன்னர் இந்தியாவுக்குத் திரும்பினார்.

அரவிந்தகோஷ் இந்தியா திரும்பும் நாளையும், கப்பல் கம்பெனி பெயரையும் அவர் இந்தியா புறப்படுவதற்கு முன்னரே, தனது தந்தை டாக்டர் கிருஷ்ணதன்கோஷ9க்கு ஏற்கெனவே, முன்கூட்டியே தெரிவித்திருந்தார் அல்லவா?