பக்கம்:இந்தியா எங்கே.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 177

ஞான

பார்க்கிறான். நானா வீழ்வேன்? வாழத் துடிக்கும் என் சத்திரிய இரத்தம் இதற்கெல்லாம் சோர்ந்து விடுமென்று எண்ணிவிட்டான். இதற்காகவா நான் ஞானதேவன் என்ற இப்பயலை, அடிமைப் பெண்ணின் இரத்தம் சம்பந்தப் பட்டிருந்தாலும், பரவாயில்லை என்று, என் குழந்தையாகப் பாவித்து வளர்த்தேன்! இதைப் பிரபுக்களுக்கு அம்பலப்படுத்தும் அவ்வளவு ஆதாரமும் ஆற்றலும் மன்மத சகாயர்க்குப் போதாது. ஆம் துணிவை விட்டுவிடக் கூடக் கூடாது. ஞான தேவனுக்கு வேறு ஒரு அரச குமாரியையே விவாகம் செய்விப்பேன். சீரோங்கும் சிங்கா தனத்தில் என் இரத்த சம்பந்தமுள்ள, அவனைத் தான் சக்ரவர்த்தியாக முடி சூட்டிப் பார்ப்பேன். இது நிச்சயம். ஆம் ஆம். -

திருப்புக் காட்சி

(தனிபேச்சு) இந்த ஏகாதிபத்ய மாளிகையின் பிரதமத் துண்கள் இரண்டையும் பூசல் என்னும் புழு உள்ளுரக் குடைந்து விட்டது. இனி வெட்டி யெறிவதில் கஷ்டமேயில்லை. அரசாங்கத்தை இழுத்துச் சென்ற இரண்டு வரிக் குதிரைகளும் நேர்மாறான இரண்டு திசைகளைப் பார்த்த வண்ணம் திரும்பி முரண் செய்யும் வேடிக்கை யைக் காணுகின்றேன். இனி இந்த ஆதிபத்திய ரதத்தின் அச்சு முறிவது உறுதி. இந்த இரு வேட்டை நாய்களுடைய பலமும், இன்னும் கடைசி வரையில் சண்டையிட்டு ஒடுங்க வேண்டும். பலவீன தாகத்திலே தள்ளாடும் கடைசி விநாடியில், ஒரு விரலால் நசுக்கிவிட்டு நமது இலட்சியத்தைப் பூர்த்தி செய்து கொள்வதே ராசதந்திரம் ஆம்! அப் பெண் வேல்விழி யென்மீதெறிந்து விட்ட வடிவேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/179&oldid=537745" இலிருந்து மீள்விக்கப்பட்டது