பக்கம்:இந்தியா எங்கே.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

இன்ப

நம் தாய்

மிகக் கூர்மையும், பலமும் கொண்ட கொடுர மான ஆயுதம் தான். அதை என் இதயத்தி லிருந்தும் மீண்டும் வலியின்றி எடுத்தெறியும் பணியையும் அவளால் தான் செய்ய முடியும்.

திருப்புக் காட்சி

(நன்கலங்கரிக்கப்பட்டு, ஒரு விலங்குச் சங்கிலி யால் பிணிபட்டு அமர்ந்திருக்கிறாள். அதுதான் மன்மத சகாயனின் அந்தப்புரம். அவள் மனத் திலே கடந்ததொரு காதற்காட்சி நிழலிடுகிறது. பாட்டுடன்) (துழைந்து என்னம்மா யோசனை. அம்மா! நீயும் ஒரு அடிமைப் பெண்ணா! ஆம் சகோதரி.

ஏன் பொய் பேசுகிறாய். நீ தான் மன்மத சகாயரின் புத்திரி என்பதை அறிந்து கொண்டேன்.

பொய்யே அல்ல அம்மா! அடிமைப்படுத்தும் அக்ரம வெறியர்களுக்குப் புத்திரியும் ஒன்றுதான் வேறு பெண்ணும் ஒன்றுதானம்மா. சிம்மாசன வெறி பிடித்தால் சொந்த மகளின் கண்ணிரைக் கூடப் பார்க்க மாட்டார்கள். உலகத்தின் பெண்மையே உருக்குலைந்து தவிக்கிறது, இந்த உலுத்தர்கள் கையில். விமோசனம் தேடியதே குற்றமென்கிறார்கள். குரூர ஜன்மங்கள்!

இப்படி உன்னினத்தைத் தாழ்த்துவதால் என் பரிதாபத்தைப் பெற்றுவிடலாமென்று நினைக்கிறாயா?

சகோதரி! முன்னொரு தடவை ஒரு புண்ணிய ஆண் மகன் இதே போன்று சொல் நெருப்பால் என் இதயத்தைப் பழுக்கச் சுட்டு விட்டதால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/180&oldid=537746" இலிருந்து மீள்விக்கப்பட்டது