உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்னமுதம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவையாறு

திருநாவுக்கரசர் கயிலையைத் தரிசிக்க விரும்பி வடதிசை நோக்கி நடந்து சென்றார். உடலில் வலு அற்றுப் போகவே ஊர்ந்தே செல்லத் தொடங்கினார். வழியில் ஒரு பெரியவர் அவரைத் தடுத்து அடுத்துள்ள குளத்தில் மூழ்கினால் திரு ஐயாற்றை அடையலாம் என்றும், அங்கே இறைவன் கயிலையில் இருந்த கோலத்தைக் காணலாம் என்றும் கூறினார். அதன்படி அடிகள் அங்குள்ள குளத்தில் மூழ்கி ஐயாற்றுக்கு வந்து சேர்ந்தார். கயிலையிலிருந்து மீளும்பொழுது நடந்து- வராமல் குளத்தில் மூழ்கி ஐயாற்றுக்கு வந்த உண்மையைத்தான் “யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது” என்ற அடி அறிவிக்கின்றது.

மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொ டும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப்
புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடுப டாமல் ஐயாறடை
கின்ற போது
காதல் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதம்
கண்டறியாதன கண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/37&oldid=1551551" இலிருந்து மீள்விக்கப்பட்டது