பக்கம்:இன்னமுதம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 ●

இன்னமுதம்


“விரும்பத்தகுந்த பிறைச் சந்திரனைத் தலைமாலையாகச் சூடியவனை, இமய மன்னன் புதல்வியாகிய உமாதேவியுடன் சேர்த்துப் பாடி, மலரையும் நீரையும் கொண்டு வழிபட்டுச் செல்லும் அடியார்களின் பின்னே யானும் புகுவேன். நடந்து வந்த சுவடு ஒரு சிறிதும் இல்லாமல் திருஐயாற்றை அடைந்த அந்த நேரத்தில், விரும்பத் தகுந்த இளம் பெண் யானை போன்றவளாகிய உமாதேவியுடன் ஆண் யானை போன்ற இறைவன் வரக் கண்டேன். அவன் திருவடிகளை கண்டேன்; அதன் பயனாக முன்னர்க் கண்டு அறியாதனவாகிய பலவற்றைக் கண்டேன்.”

(மாதர் விரும்பத்தகுந்த, கண்ணி- தலைக்கு அணியும் மாலை; போது- மலர்; யாதும் சுவடு படாமல் நடந்து வராமலேயே, களிறு- ஆண் யானை, பிடி-பெண் யானை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/38&oldid=1551552" இலிருந்து மீள்விக்கப்பட்டது