பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

7

ஒரு துறைக் கோவை

48

அக்கை யரவி னரைகா னெடுபுனை யண்ணலையுங் கொக்கை முனிந்திரு கூறுசெய் தாண்ட குமரனை யுக் திக்கை நினைத்துத் தொழும்ராச ராசன் றிருமலைவாய்ச் சக்கை யின் ருகவு மங்கரும் பீக்த தகைமைாகன்றே.

அக்கை - எலும்பை, அரவின் அரை நாண் - பாம்பாகிய அரை - ஞாணொடு; புனை - அணியும்; அண்ணல் - பெரியோன், இங்கே சிவபெருமான்; கொக்கை - மாமர வடிவில் வந்த சூரனை முனிந்து - கோபித்து; கூறுசெய்து - பிளந்து; ஆண்ட - ஆட்கொண்ட குமரன் - முருகன்; திக்கை நினைத்துத் தொழும்-சிவனும், முருகனும் வீற்றிருக்கும் திசை நோக்கி வணங்கும்; திருமலை-அழகிய மலை; சக்கை இன்றாகவும்சக்கை இல்லையாகவும்; அங்கரும்பு ஈந்த - அழகிய கரும்பினைக்

கொடுத்த சக்கு - கண்; சக்கை இன்றாகவும் - கண்களையில்லை யாகவும்; அங்கு அரும்பு ஈதல் - அவ்விடத்தே அரும்பு போன்ற முலையினைத் தருதல், தகைமை - பண்பு, முறைமை . கரும்பினுள் சக்கையிருக்கும்; நீ சக்கையில்லாத அங்கரும்பு ஈந்தாய் , ஈதோர்

வியப்பிருந்தவாறென்னே என்றபடி.

419

திங்க ளருக்திச் சுரும்பர் விரும்புக் திகழ்தளவப் பூங்கணி சூட்டிய சீராச ராசன் பொழில்வரைவா யீங்க ணிருகல் சுமந்து தளரு மிடையறிந்து தாங்க வந் தாரையுங் கையால் விலக்கலென் சால்புடைத்தே.

திம் கள் - இனிய தேன்; சுரும்பர் - வண்டுகள்; தளவப்பூங்கணி - முல்லைப் பூமாலை: கணி - கண்ணி; பொழில் - சோலை ஈங்கண் - இங்கே இருகல் சுமந்து - இரு முலைகளைத் தாங்கி; தளரும் இடை - சோர்வுறும் இடை; தாங்க - தா ங்கா நிற்கையில்; அந்தா ரையும் அழகிய கண்ணையும்; கையால் விலக்கல் - கையினால் மறைத்தல்: இடை - என்பது காலம் என்றும் பொருளாம். தளருமிடை அறிந்து - சோர்வுறும் காலமறிந்து; தாங்க வந்தாரையும் கையால் விலக்கல் - தாங்கி உதவ வந்தாரையும் கையினால் தடுத்தல்; என் சால்புடைத்து - என்ன முறைமையாகும்; முறையில்லை என்றதாம்.