உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீமை முற்றுகிறது 201 அறிவையே பொருட்படுத்தாமல், போரைத் தொடர்ந்து நடத்தத் தீர்மானிக்கையில், தன் அழிவை நோக்கி நான்காம் படியில் காலை வைத்து விட்டான். இனி, அவன் அழியாமல் தப்ப, வாய்ப்புக்கள் ஏற்படா என்பது உறுதி. அவ்வாறே ஏற்படினும், காட்சி அளவையால் அறிந்தவற்றையே புறக்கணித்துத் தன்னை 'அறிவறை போகியவனாக மாற்றிக் கொண்டவன், அவற்றைப் பொருட்படுத்துவான் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. ஆகவே, தன் அறிவையே நோக்கிச் செல்வான் என்றும், அவ்வழிவும் வெகு அண்மையிலேயே ஏற்பட்டுவிடும் என்றும் உறுதியாக நம்பலாமன்றோ? 4. தீமை முற்றுகிறது முற்றிலும் அறிவில்லாத மூடனால் தனக்கோ பிறர்க்கோ ஒரு துன்பமும் நேராது; தவறி நேர்ந்தாலும், அது தவிர்க்கக் கூடியதாகவே இருக்கும். ஆனால், அறிவு நிறைந்த ஒருவன், செருக்குக் காரணமாய்த் தான் நன்றாக உணர்ந்த ஒன்றை உணராதவனைப் போலவே செயல்புரியத் தொடங்கி, அச்செயலில் பிறரையும் ஈடுபடுத்துவதனால், அவனுக்கேயன்றிப் பிறர்க்கும் தாங்க முடியாத துன்பம் ஏற்படுவது இயற்கையேயன்றோ? இராவணன், அறிவை முற்றிலும் இழந்து போரைத் தொடர்ந்து நடத்தியதால், அவன் அழிவையே தேடிக்கொண்ட தோடு. அருமைத் தம்பியையும் மக்களையும் பலிகொடுத்தான். மகோதரன் பேச்சை நம்பிக் கும்பகருணனைப் போருக்கு அனுப்பச் சூழ்ந்த இராவணன் அவனைத் தருவித்தான். கும்பகருணன் கூறிய நற்சொற்களுள்