பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 ல் இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் எதுவும் இராவணன் செவிகளில் ஏறவில்லை. தனக்குறுதி கூறிய தம்பியை, 'எனக்கு உபதேசிக்க உன்னைக் கூப்பிடவில்லை; மனிதரோடு போர் செய்யவே அழைத்தேன்; போருக்குப் பயந்து நீ இவ்வாறு கூறுவது உன் வீரத்திற்கு ஏற்றதன்று; நீ போய்த் துரங்கு நானே போர் செய்கிறேன்' என்று கூறிப் பழித்தான். இராவணன் அறிவை இழந்து தவிக்கிறான் என்பதை நன்குணர்ந்த கும்பகருணன், இப்பழிச் சொற்களுக்கு மனம் வருந்தாமல் போருக்குப் புறப்பட்டான். என்னைவென்று உளர்.எனில் இலங்கை காவல! உன்னைவென்று உயருதல் உண்மை; ஆதலால், பின்னைநின்று எண்ணுதல் பிழை; அப் பெய்வளை தன்னைநன்கு அளிப்பது தவத்தின் பாலதே (கம்பன் - 7368) என ஒர் எச்சரிக்கை செய்துவிட்டுக் கும்பகருணன் அண்ணனிடம் இறுதியாக விடைபெற்றுக் கொண்டான். கும்பகருணனுக்குக் திண்ணமாகத் தான் வெற்றியுடன் திரும்ப முடியாது என்பது தெரியும், இதைக் கூறிவிட்டு, அவன், இதுவரை நான் பிழை ஏதாயினும் செய்திருந்தால், பொறுத்துக்கொள் என்று வேண்டிக்கொண்டு, இனி முகத்தில் விழித்தல் அற்றது என்று கூறியபடியே சென்றான். அச்சமயத்தில் இராவணனுடைய இருபது கண்களும் நீரைச் சிந்தின. எனினும், என்ன! அவன் மனிதத் தன்மையைப் பெற்றிருந்தவனேயாயின், அப்பொழுதாவது கும்பகருணனைத் திரும்பக் கூவி, அவனோடு மேல் நடக்க வேண்டுவதை ஆராய்ந்திருக்க மாட்டானா? இராவணன் கண்ணிர் வடித்தது அவனுக்குத் தம்பியினிடத்தில் உள்ள அன்பை வெளிப்படுத்து