பக்கம்:இருண்ட வீடு, பாரதிதாசன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருண்ட வீடு

26

கதவு திறக்கப்பட்டது.

தலைவர்க்குப் பசி, கூச்சலிட்டுப் பார்த்தார்.


மேலும் கதவிடிப்பு வேலை தொடங்கிற்றுப்
பனிரண்டு மணிக்குத் தனிப்பெருந் தலைவியின்
சிறுவிரல் தன்னைத் தின்ற திருட்டெலி
பெருவிரல் தன்னைப் பிடுங்கும் போதுதான்
விழித்தாள். காதில் வீதியில் தொலைவில்
புழுவொன்று சருகுமேல் புரள்வது போன்ற
ஓசை தன்னை உற்றுக் கேட்டாள்
ஆசை ஆம்படை யானா என்றே
மெதுவாய் எழுந்து மெதுவாய் நின்று
மெதுவாய்ப் பெயர்ந்து மெதுவாய் நடந்தே
கோட்டை நடுவின் வேட்டுப் போலத்
தலைவர் இடிக்கும் தடித்த கதவைத்
திறந்து விட்டுத் திரும்பி வந்து
நிறைமுக் காட்டோடு நீட்டிப் படுத்தாள்.
தலைவி விழிப்புடன் தலையசைப் பதையும்
முதல்மகன் கொண்ட முழுத்தூக் கத்தையும்
இருட்டில் விளக்கை ஏற்றிப் பார்த்த
தலைவர் "ஏனடா தம்பி சாப்பாடு -
உண்டா இல்லையா உரையடா" என்றார்.

36