பக்கம்:இருண்ட வீடு, பாரதிதாசன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருண்ட வீடு

சாப்பாட்டுக் கடை சாத்தியாய் விட்டது
போய்ப் பாத்துத்தான் புறப்பட்டு வந்தேன்
என்று கூறினார் ! ஏதும் பதிலிலை.
அத்தனை பேரும் அழிந்தா போனீர்?
ஒருவரும் இல்லா தொழிந்தா போனீர்?
என்று கூறி இரைச்ச லிட்டார்.

37