பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கெழிலென் ஞாயிறு எமக்கு? 99

பிறவிப் பெருங்கடல் நீங்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்

(திருக்குறள் : 1.0) என்பர் திருவள்ளுவர். சைவம் தழைக்கப் பெண்ணுலகின் பெரும்பயனாய்த் தோன்றிய புனிதவதியார் பின்வருமாறு இறைவனிடம் வேண்டியதாகச் சேக்கிழார் பாடுவார்:

இறவாத இன்ப அன்பு

வேண்டிப்பின் வேண்டு கின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும்

பிறப்புண்டேல் உன்னை யென்றும் மறவாமை வேண்டும் இன்னும்

வேண்டும்.நான் மகிழ்ந்து பாடி அறவாரீ யாடும் போது உன்

அடியின்கீழ் இருக்க வென்றார்.

(பெரிய புராணம்; காரைக்காலம்மையார் புராணம் : 60)

எனவே பற்றுக்கள் களையப்பட வேண்டும் என்பது பெறப்படும். ஆனால், இன்பநாட்டம் எனப்படுவது எளிதாகக் களையப்படுவதாக இல்லை. இதனை விளக்கப் பின்வரும் செய்தியினைச் சுட்டலாம் :

ஒரு மனிதனை மதயானையொன்று துரத்திவரு கின்றது. அதன் தாக்குதலிலிருந்து தப்ப மனிதன் ஒடோடிச் செல்கிறான். இறுதியில் வழி யி ல் பாழுங்கிணறு ஒன்றனைப் பார்க்கிறான். படிக்கட்டுகள் வழியே இறங்கிக் கொள்ள நினைக்கிறான். ஆனால் கிணற்றடியில் பட மெடுத்தாடும் பாம்பு சீறி நிற்கிறது. எனவே அதன் சீற்றத் திலிருந்து தப்பக் கிணற்றிற்குள் வெளியிலிருந்து வந்து உள்ளே தொங்கிக் கொண்டிருக்கும் கொடிகளைப்பற்றிக்