பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

இலக்கியக் காட்சிகள்


கொண்டு தொங்குகிறான். அப்போது அவ்வழியே வந்த எலியொன்று அக்கொடிகளைத் தன் பற்களால் கடித்து அறுக்கின்றது. அந்நிலையில் கிணற்றங்கரையில் வளர்ந் திருந்த மரத்தில் தேனிக்களால் கட்டப்பட்டிருந்த தேன் கூடு அழிந்து அங்கிருந்து தேன்துளிகள் கீழே ஒழுகிக் கொண்டிருக்கின்றன. சூழ்நிலைகளை முற்றிலும் மறந்து விட்ட மனிதன் தன் நாக்கைத் தான் இருந்த இடத்தி லிருந்தே நீட்டிச் க வைக்க நினைக்கின்றான். இதுவே மனிதர் து ய் க் கு ம் இன்பம் என்று கூறுகின்றது அச் செய்யுள். செய்யுளைக் காண்போம் :

ஆனை துரப்ப அரவுறை ஆழ்குழி நானவிர் பற்றுபு நாலும் ஒருவன் ஓர் தேனின் அழிதுளி நக்கும் திறத்தது மானுடர் இன்பம் மதித்தினை கொள்.ே

(சூளாமணி துறவுச் சருக்கம்: 149.)

இது போன்றே பொன்னாசைக்கு எடுத்துக் காட் டாகத் திருத்தக்கதேவர் சிந்தாமணிக் காப்பியத்தில் ஒரு நிகழ்ச்சியைச் சுட்டுவர்.

மனிதன் ஒருவன் நிறையச் செல்வம் திரட்டினான். அதனைத் துய்க்காமலும், பிறர்க்குத் தந்து அறந்தேடா மலும், செல்வத்தைப் பொன்னாக்கி, அப் பொன்னை உருண்டையாக்கித் தன் மனைவியிடம் கொடுத்துப் பாது காப்பாக வைத்திருந்தான். தான் தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தை நெருங்கும்பொழுது பொன் கொண்டு அறம் செய்யலாம் எனத் திட்டமிட்டிருந்தான். ஆனால் திடீ ரென்று அவன் நா அடைத்துப் பேசமுடியாத நிலைக்கு ஆளாகி, யாக்கையின் உயிர் அகத்ததோ புறத்ததோ என்னும் நிலை வந்துற்றது. உறவினர்களெல்லாம் அவன் படுக்கையைச் சுற்றிக் கூடிவிட்டனர். அப்போது அச் செல்வன் தன் மனைவியைப் பார்த்துக் கைச்சாடையால்