உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

இலக்கியக் காட்சிகள்


கள் தொங்கவிடப்பட்டு, விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு சந்திரன் உரோகிணி என்னும் நட்சத்திரத்தைச் சேரும் நல்லோரையில், மங்கல மகளிர் நால்வர் முறையே கை மாற்றி வாங்கி, புதுக்குடத்தில் துலங்கும் நீரை மணையின் மீது அமர்ந்திருக்கும் மணமகளின் தலைமீதுசாய்க்க, அக் குடத்திலிருந்து மங்கலப் பொருளாம் நெல்லும் மலரும் மணமகளின் நெறித்த கதுப்பில் வந்து தயங்கி நிற்கின்றன. கற்பினின்று நீங்காமல் நல்ல பல செயல்களுக்குக் கணவனோடு துணைநின்று, இன்று திருமணத்தில் உன்னைப் பெற்ற கணவன் எஞ்ஞான்றும் உவக்கும் வகையில் வகையுற நீ வாழ்க்கை நடத்த வேண்டும் என்று நிறைந்த நெஞ்சோடு வாழ்த்துகின்றார்கள். இதுவே பழந்தமிழர் திருமண முறை. நல்லாவூர் கிழார் பாடியுள்ள கீழ்வரும் அகப்பாடலொன்று தரும் செய்தி இது.

தண் பெரும் பங்தர்த் தருமணல் ளுெமிரி மனைவிளக் குறுத்து மாலை தொடரிக கனையிரு ளகன்ற கவின்பெறு காலைக் கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கட் கேடில் விழுப்புகழ் நாள்தலை வங் தென உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர் பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர் முன்னவும் பின்னவு முறை முறை தரத்தரப் புதல்வற் பயந்த திதலையல் வயிற்று வாலிழை மகளிர் நால்வர் கூடிக் கற்பினில் வழாஅ நற்பல வுதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை யாகென நீரொடு சொரிந்த ஈரித ழலரி பல்லிருங் கதுப்பின் நெல்லொடுங் தயங்க.

(அகநானுாறு; 86 : 3-16)