பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கெழிலென் ஞாயிறு எமக்கு? I05.

தமிழ்நாட்டுப் பெண்கள் தனித்திறம் பெற்றவர். கணவனையே தெய்வமெனப் பேணி ஒழுகுபவர். நாடு நாடாயினும், காடாயினும், நிலம் மேட்டு நிலமாயினும் பள்ள நிலமாயினும் அந் நிலத்தில் வாழும் ஆடவர் நல்லா ாயின் அந் நிலமும் நன்னிலமாகிவிடும் என்பர் ஒளவையார்.

நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி கல்லை வாழிய நிலனே’.

(புறநானூறு: 187)

இதனால் தமிழக மகளிர் பண்பாட்டுச் சிறப்புத் தாமே போதரும். ஏர் பிடித்தவன் என்ன செய்வான்; பானை பிடித்தவள் பாக்கியம்’ என்பர். ஒரே பசுவை வைத்துப் பிழைத்துச் சிறப்பற்ற வாழ்க்கை வாழ்ந்து வந்த குடும்பத்திற்கு மருமகளாக ஒரு பெண் விளக்கேற்ற வந்தாளாம். அவள் வருகைக்குப் பின் அவ் வீடு இனிய விழவுகள் நிகழும் ஊர் போலாயிற்றாம்.

ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை பெருகலக் குறுமகள் வங்தென இணிவிழ வாயிற் றென்னுமிவ் ஆரே.

(குறுந்தொகை 295 : 4-6)

பெண்தான் இல் வாழ்வின் உயிர். உழுவார் உலகத் தார்க்கு ஆணி ஆவர். இல்லறத் தேரின் அச்சாணியே மகளிர். ‘இல்லாள்” எனுஞ் சொல், இல்லத்தின் ஆளுமை பெண்ணிற்கே உரியதெனும் உரிமை முழக்கம் செய்யும் சொல்லாகும். இல்லான்’ எனில் வறியவன் என்பது பொருள். வீட்டை எண்ணிப் பார்க்கத் தமிழர், பெண்கள் புழங்குகின்ற கடைப்பகுதியை முதல் என்று கொண்டு