பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

இலக்கியக் காட்சிகள்


உள் நுழைவாயிலை-தலைவாயிலைக் கடை என்ற பெய ரால் வழங்கிய செய்தி,

ஒல்குபசி புழந்த வொடுங்குநுண் மருங்குல் வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த குப்பை வேளை யுப்பிலி வெந்ததை மடவோர் காட்சி காணிக் கடையடைத்து இரும்பே ரொக்கலொடு ஒருங்குடன் மிசையும்

(சிறுபாணாற்றுப்படை; 135-139) எனும் சிறுபாணாற்றுப்படைப் பகுதிக்கு,

‘வறுமையுறுதலும் இயல்பென்றறியாது புறங் கூறுவோர் காண்டற்கு நாணித் தலைவாசலையடைத்து மிடியாற் கரிய பெரிய சுற்றத்தோடே கூடவிருந்து அடையத்தின்னும்’ என்று உச்சிமேற் புலவர் கொள்’ நச்சினார்க்கினியர் வரைந்த உரையால் விளங்கும்.

மேலும் ஆண்டுகள் பலவாகியும் நரையிலவாகுதலின் காரணத்தை உசாவிய மக்கட்குப் பிசிராந்தையார் “மாண்டவென் மனைவியோடு மக்களும் நிரம்பினர்’ என முதலாவது குணங்களால் பெருமை பொருந்திய மனைவி யையே குறிப்பிட்டுள்ளது கொண்டு அறியலாம். தமிழ் மறையும்,

இல்லதென் இல்லவள் மாண் பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை.

(திருக்குறள்; 53) என முழங்கிற்று.

சங்க காலத் தலைவி, தாய் சினந்து சீறிக் குழந்தையினைக் கோல்கொண்டு ஒச்சியடிக்கும்பொழுது, ‘அம்மா அம்மா’ என்றே கதறியழுவதைப் போன்று