பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்றல் வரவு 133

காணி நிலத்திடையே-ஓர் மாளிகை கட்டித்தர வேண்டும்-அங்கு கேணியருகினிலே-தென்னைமரம் கீற்று மிளநீரும் பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம் பக்கத்திலே வேணும்;-நல்ல முத்துச் சுடர்போல-நிலாவொளி முன்பு வர வேணும்;-அங்கு கத்துங் குயிலோசை-சற்றேவந்து காதிற்பட வேணும்;-என்றன் சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளங் தென்றல் வரவேணும்.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்களும் உமர் கய்யாம் பாரசீகக் கவிதையினைத் தமிழில் மொழி பெயர்க்கையில், தென்றற் காற்றிற்குச் சீரிய இடந் தந்துள்ளார். - வெய்யிற் கேற்ற நிழலுண்டு; வீசும் தென்றல் காற்றுண்டு; கையில் கம்பன் கவியுண்டு கலசம் நிறைய மதுவுண்டு! தெய்வ கீதம் பலவுண்டு; தெரிந்து பாட நீயுண்டு வையந் தருமிவ் வனமின்றி வாழும் சொர்க்கம் வேறுண்டோ? புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள், தென்றல் தமிழ்நாடு பெற்ற செல்வம் என்று பாராட்டுகின்றார்.

தென்னாடு பெற்ற செல்வத் தென்றலே உன் இன் பத்தைத் தென்னாட்டுக் கல்லால் வேறே எங்காட்டில் தெரியச் செய்தாய்?

(அழகின் சிரிப்பு; தென்றல். 3)