பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

இலக்கியக் காட்சிகள்


அரசவைக் க வி ளு ர் கண்ணதாசன் அவர்கள் தாலாட்டுப் பாடலொன்றில் தென்றலின் சீர்மையினைப் பின்வருமாறு புகழ்வர்:

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந் தென்றலே.

மேலும் இவர், பேரறிஞர் அண்ணாவின் சொற் பொழிவு கவிதை போலவே இருந்தது என்பதனை எடுத்துக் கூற, முதற்கண் தென்றலை உவமை காட்டி யுள்ளார்.

வீசு மென் தென்றல் போலும் வெண்ணில வொளியே போலும் காசறு மலரின் மேவும் கவின்சலை மணமே போலும் பாசமும் அறிவும் சேர்க்கும் பனிமொழி அடுக்கை வாரி வீசினான் பலபேர் அ.து பாட்டென விளம்பிப் போனார்.

இவ்வாறாகச் சங்ககாலந் தொடங்கி, இற்றை நாள் வரையில் ‘தென்றல் கவிஞர் வாக்கில்சிறப்பிடம் பெற்றுத் துலங்குவதைக் காணலாம். அசைவளி’ என்றும் மென் காற்று என்றும் தென்றலைச் குறிப்பிடுவர். வடக்கே யிருந்து வரும் வாடையினும் தெற்கேயிருந்து வரும் தென்றல் பெரிதும் போற்றப்பட்டது. தென்றற் காற்றில் தெம்மாங்கு தேன்பாங்குப் பாடல் சிந்தை குளிர்விச்கும் திறத்ததாகக் கருதப்பட்டது. தென்றல்வரவு பொலிவதாக,