பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

இலக்கியக் காட்சிகள்


திகைத்து, கடுங்காற்றில் சிக்கிய சருகெனச் சுழல்கின்றான் (பாடல் எண். 6). உன்னத புண்ணிய நகர் வாழ்வை நாடாது, நாசநகரில் வாடுவது உலர்ந்த என்பை நாய் நச்சுவது போலாகும். (பாடல் எண். 10.)

அறிவற்றவர்க்குக் கூறும் அறிவுரையால் பயன் இல்லை என்பதை,

‘பந்தமே கொளுத்தினாலும் பயனுண்டோ குருடர்க்கு அம்மா!’

என்ற உவமையால் கேட்கிறார் ஆசிரியர். (பா. எ. 14)

அழிம்பன் ஆன்மிகனுக்குத் தருவதாகக் கூறும் சுகம், நாய் சிங்கத்திற்குத் தரும் அரசாக உவமிக்கப்பட்டுள்ளது (டா. எ. 422). அழிப்பன், விட்ட வசைக் கணைகள், அற வோரிடம் கொடியவர் தீவினை அழிவதுபோல் அழிந்து பட்டன (பா. எ. 439).

ஆசிரியரின் சிறந்த உவமைத் தொடர்களை எடுத்துக் காட்டுவது, இவ்விலக்கியச் சிறப்பை உள்ளங்கை நெல்லிக் கனியென விளக்குவதாகும்.

‘தற்பதம் இழந்த மாந்தர் தலைஇழி சிகையே அன்றோ?’ (பா. எ. 48).

‘அரும்பெறல் மக்களை ஆவி என்றுஉனை விரும்பிய மனைவியை வெறுத்திட்டு ஏகுதல் கரும்புவேம் பாயதோர் கணக்குப் போலுமால்!’

(பா. GT. 84)

‘வம்பு துற்றிய வார்த்தைக்கு இணங்கியே கொம்பு இழந்த குரங்கெனல் ஆயினேன்’’.

(шт. ст. 153)