பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தின் நோக்கங்கள் 2I

இனியொரு விதி செய்வோம் அதை

எங்ங நாளும் காப்போம் தனியொருவனுக் குணவிலை யெனில் ஜகத்தினை அழித்திடுவோம்

(பாரத சமுதாயம் : 21)

எனப் பொதுவுடைமையை ஏற்படுத்தும் வகையில் அவர் பாடும் குரல் ஏற்றத் தாழ்வற்ற சமுதாயத்தை அமைக்க வழிவகுக்கின்றது.

கவிஞர்கள், மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப் பட்டுச் சட்டமன்றத்தில் சட்டமியற்றாவிட்டாலும் தம் மன உலகில் சிந்தித்து நாட்டு மக்களுக்கு வேண்டிய நல்ல சட்டத்தை இயற்றுகிறார்கள். சான்றாகப் பாரதி தாசனின் புரட்சிக் கருத்துகள் சிலவற்றைக் கூறலாம்.

சமுதாயத்தில் புரையோடிப்போன உள்ளங்களுக்குப் புனித மருந்து போடும் தொழிலில் அவர் இறங்கியுள்ளார். விதவைத் திருமணத்தை வலியுறுத்து முகத்தான்.

வாடாத பூப்போன்ற மங்கை கல்லாள்; மணவாளன்

இறந்தால் பின் மணத்தல் தீதோ?

பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்

பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?

என்கிறார்.

பெண்கள் குடித்தனம் பேணுவதற்கும், மக்களைப் பாதுகாப்பதற்கும், உலகினை உணர்ந்து கொள்வதற்கும், கல்வியைப் போற்றுதற்கும் பெண்களுக்குக் கல்வி வேண்டும் என்று கூறுகின்றார்.