உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இலக்கியக் காட்சிகள்


கல்வியில் லாத பெண்கள் களர்நிலம் அங் நிலத்தில்

புல்விளைங் திடலாம்; நல்ல புதல்வர்கள் விளைதல்

- (இல்லை

கல்வியை உடைய பெண்கள் திருந்திய கழனி,

(அங்கே

நல்லறி வுடைய மக்கள் விளைவது நவிலவோ கான்

(குடும்ப விளக்கு, இரண்டாம் பகுதி) கம்பன், பாரதி இவர்கள் புத்துலகம் காண முயன்றதைப் போன்றே, அவர்கள் வழித்தோன்றலாம் பாரதிதாசனும் சாதி சமயப் பேதங்களற்று, மூடப்பழக்க வழக்கங்களை முறியடித்து, முன்னேற்றப் பாதையில் முனைந்து சென்று புத்துலகம் காண வழி வகுக்கின்றார். இதனை,

என்கின்றார்.

சாதிமத பேதங்கள் மூடவழக்கங்கள்

தாங்கி நடை பெற்றுவரும் சண்டையுல கிதனை ஊதலினால் துரும்புபோல் அலக்கழிப்போம் பின்னர் ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்

(திடுவோம்!

என்ற அடிகளில் காணலாம்.

முடிவுரை

‘காலத்தின் இடையிடையே ஹோமர், ஷேக்ஸ்பியர், மில்டன் முதலிய கவிஞர்கள் தோன்றியிருக்காவிட்டால் உலகம் அழிந்திருக்கும்’ என்கிறார் ஷெல்லி. ஆம்; இது தான் உண்மை. உலகைக் கட்டிக் காக்கும் பொறுப் பினைப் பெரும்பான்மையும் கவிஞர்கள் ஆக்கும் காவியங் களே பெற்றுத் திகழ்கின்றன. உடலுக்கு உரத்தை விஞ்ஞானம் தரலாம். ஆனால் உள்ளம் பண்பட இலக் கியம் பெரிதும் பயன்படுகிறது. முதன்முதலில் இலக் கியத்தைப் படிக்கும் பொழுது நமது மூளை தாங்குகிறது.