பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தின் நோக்கங்கள் 23

நமது மனமும் அமைதி அடைகிறது. பின்னர் அந்த இலக் கிய உலகிலே தமது நுண்ணுடல் செல்கிறது. அங்கு நிகழும் இன்ப துன்ப உணர்ச்சிகளை மனம் அடைகிறது. ஆனால் அதனால் நமது பருவுடல் துன்பமடைவதில்லை’ என்பர் டாக்டர் மு. வரதராசனார். இதுவே இலக் கியத்தின் குறிக்கோளாகும்.

இலக்கியம் செம்மையான மனத்தினை நமக்குத் தரு கிறது. பணம் எவ்வளவுதான் இருந்தாலும் மன அமைதி கிட்டி விடாது. அமைதியைக் கொடுக்கக்கூடிய அரு மருந்து இலக்கியமே ஆகும். அமைதியை இலக்கியம் தவிர வேறெந்தப் பொருளும் வழங்கிவிட முடியாது. அமைதியே -அன்பே வாழ்வின் நிறையுடைமையை எடுத்தியம்பும். அமைதி! அமைதி! அமைதி! எனத் தவம் இயற்றும் தவசி கள் கூட அமைதி பெற்றுவிட முடியாது. ஆனால் அதே நேரத்தில் இலக்கியத்திலேயே தனது வாழ்நாளினைக் கழிக்கும் ஒரு பெரியார் அமைதியினை எளிதாகப் பெற்று விடுவர். இதனாலன்றோ நீற்றறையில் தவமுனியாம் திருநாவுக்கரசர்,

மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எங்தை இணையடி கீழலே

என்று பாடிப் பரவசப்பட்டார். மேலும், நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்’ என்றும் சொல்லத் தகும் துணிவும் நெஞ்சுரமும் பெற்றிருந்தார்.

‘அலைகள் ஓயாமல் மோதும் கற்பாறை போன்று இரு; அது அலைகளின் வேகத்தை அடக்கிவிடும்’ என்கிறார் மேலை நாட்டு அறிஞர் மார்க் ஒளரேலியன். அந்த அமைதி இலக்கியத் தேர்ச்சியினால், இலக்கியம் அளிக்கும் வற்றாத இன்பத்தினால் வருவதொன்றாகும்.