பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெறியாட்டு 43

வெறியாட்டு நிகழும் சூழ்நிலை

தலைவன் மாட்டுத் தன் நெஞ்சம் நெகிழ்ந்து அவ னிடத்து ஆராக்காதல் கொண்டு வாழும் தலைவி, சில நாள் களில் தலைவனைச் சந்தித்துப் பேச முடியாது போயின் கவல்வாள்; தலைவனைப் பிரிந்திருக்க முடியாத தலைவி உடல் மெலிவாள். தலைவியின் மேனியிலே தோற்றிய வேறுபாடு கண்ட தாய் முதலியோர் அவ் வேறுபாடு எத னால் ஏற்பட்டதென்று ஆராயப் புகுவர். நெல்லை முறத் தில் வைத்துக் குறி பார்ப்பவளாகிய கட்டுவித்தியை அழைத்துவந்து கட்டுப் பார்ப்பர். ‘கட்டுப் பார்த்தலாவது ஒரு முறத்தில் நெல்லை வைத்து அதை எண்ணிப் பார்த்து அவ்வெண்ணின் வழியே அறிந்த செய்திகளைக் கூறல்” என்பதாகும்.’ இவ்வாறு நிமித்தம் பார்ப்பவள் அகவன் மகள் என வழங்கப்படுவாள். அவ்வாறு அவள் தெய்வங் களைப் பாடி அழைத்து நிமித்தம் பார்க்கும் பொழுது, தலைவி, தலைவனிடத்துக் கொண்டு காதலை எவ்வாறே னும் தாய்க்கு அறிவித்துவிட வேண்டும் என்று எண்ணங் கொண்ட தோழி அவ் அகவன் மகளை அணுகுகின்றாள். அவள் ஒவ்வொரு மலையாக வருணித்துப் பாடிவிட்டு, தலைவன் வாழும் குன்றத்தையும் பாடி முடித்தவுடன், மீண்டும் ஒரு முறை தலைவனின் குன்றத்தையே பாட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறாள். இதனால் தாயர் முதலியோருக்குத் தலைவியின் காதல் நெஞ்சமும் வாழ்வும் தெரிய வருகின்றன. அப் பாட்டு வருமாறு:

அகவன் மகளே அகவன் மகளே மனவுக்கோப் பன்ன கன்னெடுங் கூந்தல் அகவன் மகளே பாடுக பாட்டே

12. டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர்: குறுந்தொகை உரை: நூலாராய்ச்சி ப. 79.