உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

இலக்கியக் காட்சிகள்


இன்னும் பாடுக பாட்டே யவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.”

இஃது அறத்தோடு நிற்றலின் ஒரு வகையாகும். இவ்வறத் தோடு நிற்றலின் மற்றொரு வகையே வேலன் அயரும் வெறியாட்டாகும்.

வேலன் வெறியாட்டயர்தல்

தலைவியின் உடலில் வேறுபாடு கண்ட தலைவியின் தாய் முருககோயிற் பூசாரி படிமத்தான் எனப்படும் வேலனை அழைத்துத் தலைவியின் நோய்க்குரிய கார ணத்தை வினவுவாள். வேலன், குறிஞ்சி நிலத்தெய்வம் முருகனேயாதலால் இது முருகனாலாயதென்று கூறுவான். முருகனுக்குப் பலி கொடுத்துப் பூசனை புரியின் தலைவி யின் நோய் நீங்குமென்பான். முருகனை விளையாட்டயர வேலன் புனையும் வெறியயர்களம் மிகவும் அழகுறப் புனையப் பெறும். குறுந்தொகையில் இருபாடல்களில்” இவ் வெறியயர் களம் பற்றிய குறிப்பு இடம் பெற்றிருக்கக் காணலாம். மணற் பரப்பிலே புன்க மலர்கள் உதிர்ந்து பரவிக் கிடத்தல், முருகன் வெறியர் கள ந்தொறும் செந் நெல் வான்பொரி சிதறினாற் போல உள்ளது,” என்றும், ‘விளங்கிய கடற் பரப்பிலே நல்ல மணங்கமழும் ஞாழல் மலருடன் புன்னை மலரும் பரவி வெறியயர் களம் போலத்

13. குறுந்தொகை : 23

14. குறுந்தொகை 53, 318

15. “............... முன்றில்

நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல் வேலன் புனைந்த வெறியயர் கள ந்தொறும் செந்நெல் வான் பொரி சிதறி யன்ன.’

(குறுந்தொகை : 53)