உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெறியாட்டு 45

தோன்றும் என்றும் வெறியயர்களம் பற்றிச் சொல்லப்

பட்டிருக்கின்றது.

மதுரைக் காஞ்சியில் வெறியாடு களம்

தலைவியின உடல் மெலிவிற்குக் காரணம் முருகனே என்று கூறி, வேலன் முருகனைப் பரவி வழிபட்டுக் கூத்தாடுவான். அரிய அச்சத்தைத் தோற்றுவிக்கும் வேலன் தலைவிக்கு வந்துள்ள இடுக்கண் முருகனால் விளைந்தது என்று கூறி, கேட்டோரை வளைத்துக் கொண்டு, அரித்தெழும் ஒசையையுடைய இனிய வாத் தியங்கள் ஒலிக்க, கார்காலத்தே மலரும் மலராகிய குறிஞ்சியைச் சூடி, கடப்ப மாலையணிந்த முருகனைச் செவ்விதாகத் தன் மெய்க்கண்ணே நிறுத்தி வழிபட மகளிர் தம்முள் தழுவிக் கைகோத்து மன்றுகள் தோறும் நின்று குரவைக் கூத்து அயர்வர்.’

திருமுருகாற்றுப்படையின் வெறியயர் களம்

கோழிக் கொடியுடன் திருமுருகனைக் களத்திற்கு எழுந்தருள்வித்து, நெய்யுடன் வெண்சிறு கடுகையும் மெய்

16. எறிசுறாக் கலித்த விலங்குநீர்ப் பரப்பின்

நறிi ஞாழலொடு புன்னை தாஅய் வெறியயர் களத்தினிற் றோன்றும்.’

- குறுந்தொகை : 318

17. அருங்கடி வேலன் முருகொடு வளைஇ

அரிக்கூட் டின்னியங் கறங்கநேர் நிறுத்துக் கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின் சீர் மிகு நெடுவேள் பேணித் தழுஉப் பிணையூஉ மன்றுதொறு நின்ற குரவை.

- மதுரைக் காஞ்சி; 613-615