பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

இலக்கியக் காட்சிகள்


ஒரு ஞான்று தலைவி தோழிக்கு அறத்தோடு நின்று இறுதியில் பின்வருமாறு உரைத்தாள்: நான் நம் குடிக்கு மாசு வராமல் கற்புக்கடம் பூண்ட செய்தியை உரியவர் பால் உரை. நீ உரைப்பின், நிலையற்ற உலகில் நிலைநிற்ப தோர் புகழ் நமக்குப் பொருந்தும் என்று கூறினாள்:

.................................கம்ங்கர் அருங்கடி நீவா மை கூறின் கன்றென நின்னொடு சூழ்வல் தோழி நயம்புரிந்து இன்னது செய்தாள் இவளென. மன்னா வுலகத்து மன்னுவது புரைமே.”

இதனால் குறமகளின் குன்றன்ன ஒழுக்கநிலை நுண்ணிதிற் புலனாகும்.

மருதனிள நாகனார் ஊடியும் கூடியும் தலைவன் தலைவியர் போகம் நுகரும் மருதத்திணை யொழுக் கத்தைப் பாட வருகின்றார். காதலரிருவரும் விரும்பும் திருமண நாளன்றிரவு, தலைவி ஆடைக்குள் ஒடுங்கிய வளாக, காதல் கொண்ட மருண்ட மான் நோக்கினை யுடையவளாக விளங்குகின்றாள். வேதம் வல்ல அந்தணன், இருவரையும் எரியை வலம் வருமாறு சொல்ல, தலை வனும், தலைகவிழ்ந்தவாறு தலைவியும் வலம் வருவர்’ என்று கற்புநெறியில் தலைப்படும் காதலர் காட்சியின் மாட்சியினை விளக்கிக் காட்டுவர்:

காதல்கொள் வதுவைகாள் கலிங்கத்துள் ஒடுங்கிய மாதர்கொள் மான்நோக்கின் மடங்தைதன்

துணையாக ஒத்துடை அந்தணன் எரிவலம் செய் வான்போல்.”

கணவன். தன் வாழ்விற்குத் துன்பம் நல்கும் பரத்தமையொழுக்கத்தில் திளைத்திருந்தாலும் கூடத்

18. கலித்தொகை; குறிஞ்சிக்கலி; 18 , 16-20. 19. கலித்தொகை, மருதக்கலி; 4 : 3-5.