பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்தொகை காட்டும் மகளிர்'கற்புநெறி 59

தன்னிலை பிறழாமல், தன்நெறி மாறாமல் ஒன்றிய உள்ளத்துடன் தலைவி வாழுகின்றாள் என்னும் கற்பு நெறியின் கடவிய வாழ்க்கையின் மருதக்கலிப் பாடல்கள் பலவும் நமக்கு எடுத்துக்சாட்டுகின்றன. மழை பெய்தால் செருக்குற்று, வறண்டால் அழகு கெட்டு அழியும் விளை நிலத்திற்கு மழைபோல, தலைவன் உடனிருந்தால் அழகு பொலிந்து துலங்கி, அவன் கைவிட்டால் தலைவி வாடும் நிலையினை மருதக்கலிப் பாடல் ஒன்று உணர்த்துகின்றது.

பெயின் நந்தி வறப்பின்சாம் புலத்திற்குப் பெயல்

போல்யான் செலின் நந்திச் செறின்சாம்பும் இவன் என்னும்தகை (யோதான்.?

முல்லைத்தினை இ ரு த் த ல் ஒழுக்கத்தினைக் குறிப்பது: முல்லை என்னும் சொல்லே கற்பினையுணர்த்தி நிற்பது என்பர். முல்லைக்கலிப் பாடல்களில், முல்லை நிலத்தில் வாழும் ஆயமகளிரின் கற்பொழுக்கம் கவினுறக் காட்டப்படுகின்றது. ஏறு தழுவுதல் என்ற பண்டை யொழுக்கம் ஒன்றினை முல்லைக்கலிப் பாடல்கள் சித்திரிக்கின்றன. காதலியின் கையினைத் திருமணத்திற் பெறுதற்கு முன், காதலன் ஏறு தழுவி அதன் கொம்பினைப் பிடித்து நிறுத்தி வெல்லும் வீரம் பேசப்படுகின்றது. ஏறு தழுவித் தான் காட்டிய வீரத்திற்கு வெற்றிப் பரிசசாகத் தலைவன், தலைவியினைத் திருமணத்திற் பெறுகிறான். வீரமும் காதலும் இணைந்து இல்லற நெறிப்படும் இனிய சிறப்பினை இம்முல்லைக்கலிப்பாடல்களில் முறையே காணலாம். ஏறு தழுவுதல் எனும் அந் நிலையினை வீரம் விளங்கப் புலவர் ந ல் லு ரு த் தி ர ன ா ர் வருணிக்கக் காணலாம்,

20. கலித்தைாகை, மருதக்கலி: 13 :19-20.