பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

6 இலக்கியக் காட்சிகள்


நிலையினின்று சிறிது விலகினாலும் அதன்மேல் ஊர்ந்து செல்லும் புகைவண்டி கவிழ்ந்து போவது திண்ணம். எனவே, இலக்கியத்தின் நோக்கம் அன்புருவான நெஞ் சினை வளர்ப்பதே ஆகும். காட்டாக, ஏழையின் வாழ்வுப் படப்பிடிப்பை முதலாளியும், மண் குடிசையிலே மக்கள் அலமருவதை மா வரி ைக வா சி க ளு ம், முதலாளியின் வாழ்வைத் தொழிலாளியும் எப்படி அறியமுடியும்? கொலைப் பாவத்தின் கொடுமையைச் சித்திரிக்காவிடில் கொலையாளியின் நெஞ்சம் சீர்திருந்துவது எவ்வாறு? கொடுமையைத் தங்கள் வடிவாகக் கொண்ட கல் நெஞ்சர் கள் மடிமை தொலைந்து மக்கள் மன்றத்திலே மதிப்புப் பெற்ற மானமுள்ள வாழ்வு வாழ்வது எவ்வாறு?என்றெல்லாம் இலக்கியம் நாட்டு நீதியை, நடைமுறை வாழ்க்கையை, நன்கு படம் பிடித்துக் காட்டி நல்வழி நடக்க வகை செய்கிறது. இவ்வாறு வாழ்க்கை உண்மை களை எடுத்துக்காட்டுவதும், எடுத்துக் காட்டித் தம்மைப் பயிலுவோர் நெஞ்சங்களை நெறிப் படுத்துவதுமே இலக்கியங்களின் தலையாய நோக்கங்களாகும்.

வாழ்வும் இலக்கியமும்

வாழ்க்கையினின்றும் உயிர்பெற்றன. ஆதலின், இலக் கியங்கள் வாழ்க்கை உண்மைகளை உள்ளது உள்ளவாறே படம் பிடிக்கின்றன. வீட்டு வாழ்விற்கு விளக்கமாகத் திகழ்கின்றவள் மனைவி. அதுபோல், நாட்டு வாழ்விற்கு அணிகலனாகத் துலங்குபவன் ஆடவன், இந்த உண்மையை,

மனைக்குவிளக் காகிய வானுதல் கணவன்
முனைக்குவரம் பாகிய வென்மேல் கெடுங்தகை

என்ற புறநானூற்றுப் பகுதி புலப்படுத்துகின்றது. இத் தகைய வாழ்வுப்போக்கில் ஆடவர் கொண்ட கடமை